பக்கம்:தரும தீபிகை 5.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70. பு லை 1693 தாண்டிலால் மீன்களைப் பிடித்து உண்டவர் பின்பு நரக துன்பங்களை அடைந்து கைந்து உழல்வர் என இது உணர்த்தி யுளது. புலையும் கொலையும் பொல்லாக் தீமைகளாய் கின்றன. கொன்றிலாரைக் கொலச்சொல்லிக் கூறினர் தின்றி லாரைத் தினச்சொலிக் கெண்டித்தார் பன்றியாய்ப் படியிற்பிறந்து ஏழ்நாகு ஒன்றுவார் அரன்ஆணையி துண்மையே. _ (க) கொலே அஞ்சாது ஒருவற்கு அஞ்சிக் கொன்றுளோர் சிலர்சொல் அஞ்சிப் புலாவினைத் தின்றுளோர் நிலையதாப் நரகத்திடை நிற்பர் என்று _ அலகில் நூல் மறை ஆகமம் ஒதுமே. (பெருந்திரட்டு) புலை உணவால் இன்னவாறு பலவகையான பழி துயரங் கள் விளைகின்றன; ஆதலால் அங்க ஈன ஊனே உண்ணுமல் ஒழித் துப்புனித நிலையில் ஒழுகிவரின் மனிதன் இனிய நலன்களை எய்த நேர்கின்ருன். ஊனம் ஒழிவது ஞானம் தெளிவதாம். புன்புலால் யாக்கை பொருந்தி யிருந்தும் கன்புலே ஒர்ந்து தவநிலை காணுது அன்பில ராகி அவமே இழிந்து வன்புலால் உண்பது வசைதுய ராமே. தன் பிறப்பின் நிலையை உணர்ந்து மனிதன் சிறப்பு நிலையை அடைந்துகொள்ளவேண்டும். அ ங் எ ன ம் அடையானுயின் அவன் கடையாயிழிந்து கதியிழந்து படுகின்ருன். :புன்புலால் உடம்பின் அசுத்தமும் இதனில் புகுந்து நான் இருக்கின்ற புணர்ப்பும் என்பொலா மணியே! எண்ணிநான் எண்ணி ஏங்கிய ஏக்கம் அறிவாய்! வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு மயங்கியுள் நடுங்கி ஆற்ருமல் என்பெலாம் கருக இளைத்தனன் அங்த இளேப்பையும் ஐயங் அறிவாய்' (அருட்பா) புலால் உண்பவரைக் கண்டபோது மனம் கலங்கி இராம லிங்கசுவாமிகள் நடுங்கியுள்ள நிலையை இகளுல் உணர்ந்துகொள் கிருேம். அவரது சீவகாருணிய நீ ர் ைம உரைகள் தோறும் வெளிவந்துள்ளன. உயிர் இரக்கம் உயர்கதியை உணர்த்தியுளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/154&oldid=1326711" இலிருந்து மீள்விக்கப்பட்டது