பக்கம்:தரும தீபிகை 5.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1698 த ரும பிே கை களையும் இனிது அருளும் எனத் தேவர் இங்கனம் கூறியுள்ளார். பல பாவங்களும் ஒரு கொலேயால் வரும் என்ற தல்ை அதன் கொடிய புலைகிலேயும் நெடிய துயரமும் நேரே புலனும். கொலைபுரிந்தவன் பாவியாயிழிந்து இம்மையில் படுதுயரங் களை அடைகின்ருன்; மறுமையில் அடுநரகங்களில் அழுந்தி அல மந்துழல்கின்ருன். கொல்லா விரதமுடையவன் எல்லா நலங் களையும் எளிதே எ ப்தி என்றும் இன்புற்றிருக்கின்ருன். கொல்லுதலால் அல்லல்கள் பல வரும் ஆதலால் யாண்டும் எவ்வுயிர்க்கும் யாதொரு இடரும் கருதாமல் ஒழுகுவதே நல்ல தாம். கொல்லாமை ஒன்றைக் கடைப்பிடித்து ஒழுகின் அவன் எல்லா அறங்களையும் ஒருங்கே அடைந்து கொள்ளுகின்ருன்; கொள்ளவே மேலான உயர்ந்த கதிகளை விரைந்து எப்துகிருன். 'யானே அடியில் அடங்கா அடியில்லை; தானதுபோல் கிற்கின்ற தன்மைதான்---ஊனுயிரைக் கொல்லா அறத்தின் கொழுகிழற்கே உள்அடங்கும் o எல்லா அறமும் இசைந்து' (இதிகாசம்) யானையின் காலடியில் எல்லா அடிகளும் அடங்கி அமைதல் போல் கொல்லா விரதத்தில் எல்லா அறங்களும் அடங்கியுள்ளன; இத்தகைய உத்தம கிலேயைத் த ழு வி ஒழுகி விழுமியனுப் உயர்ந்து மனிதன் உய்யவேண்டும் என இது உணர்த்தியுளது. கொலேயாதி நெறியகன்ற ஞானம்தானே கடறரிய மேலான ஞானமாகும்; கொலேயாதி அகன்றுஒழுகும் கவங்கள்தாமே குற்றமிலா கற்றவம் என்றுரைக்கு நூலும்; கொலேயாதி அகற்றியநல் லறங்கள் தாமே குவலயத்தில் ஒப்பரிய அறங்கள் ஆகும்; 'கொலேயாதி அகன்றுபெறும் செல்வம்தானே கூறினுயிர்க்கு இதமானவாழ்வதாமே. (சிவஞானதீபம்) கொல்லாமையால் இன்னவாறு எ ல் ல ள மேன்மைகளும் விளைந்து வருகின்றன. இந்தக் கரும நிலையை ஒருவிக் கொலையை மருவநேரின் கொடிய துயரங்கள் பெருகிவரும் ஆதலால் அதனே பாதும் அனுகாமல் யாண்டும் அருளோடு ஒழுகிவர வேண்டும். moss. --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/159&oldid=1326716" இலிருந்து மீள்விக்கப்பட்டது