பக்கம்:தரும தீபிகை 5.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1700 தரும தீபிகை லிருந்து வழுவிய அளவு மடமையாய் இழிவுறுகின்ருன். பிற உயிர்களுக்கு நேர்ந்த துன்பங்களை நீ க் கி இன்பங்களே ஆக்கி யாண்டும் இதமாய் நடந்துவருவதே உயர்ந்த மனிதனது இயல் பாம் என்க. இனிய பான்மையே அரியமேன்மையாய்வருகிறது. பொருளுடையான் என்று பெயர் பெறுவதினும் அருளு டையான் என்று பெயர்பெறின் அது அவனுக்கு எவ்வளவோ மகிமையாம். இனிய நீர்மையால், இன்பங்கள் பெருகிவருகின் றன; கொடிய தீமையால் துன்பங்களே தொடர்ந்து விளைகின்றன. உயிர்களுக்கு எவ்வழியும் இதமே செய்துவர வுரியவன் அகிதங்கள் செய்ய நேரின் அவை அநியாயத் தீமைகள் ஆகின் றன; ஆகவே அவன் நரகதுன்பங்களை அனுபவிக்கநேர்கின்ருன். கொடிய செயல்களுள் கொலை மிகவும் கொடியது. உயிர் களைப் பதைக்கச் செய்வதால் அது நெடிய சேமாய் நின்றது. பிறஉயிர்களுக்குச் சிறிது திங்கு நினைத்தாலும் அது பெரிய பாவ மாம், உள்ளத்தே எண்ணிலுைம் இவ்வாறு பாவம் விளைந்து படு துயரங்களுக்கு ஏதுவாகின்றகே கொலைசெய்ய ே ர் க் கால் அதன் விளைவு என்னும்? என்பதை ஒர்ந்து உணரவேண்டும். கொலைகாரன், பழிகாரன், பாவி என்பன எவ்வளவு இழி வான ஈனங்கள்! நீசமான இந்த ஈன நிலைகளை மான மனிதன் யாதும் மருவலாகாது. மருவின் ஈசன் அருள் ஒருவி விடும். கொலேயால் பழிமுதலிய இழிவுகளும் அழிதுயரங்களும் விளேகின்றன. விளேயவே உயிர் அதோகதியில் விழுகிறது. கொல்லாமையால் எல்லா நன்மைகளும் வருகின்றன. உயிர்களுக்கு இடர்புரியாமல் இருப்பதே கொல்லாமையாய் வருதலால் அது எல்லா இன்பங்களையும் இனிது அருளுகின்றன. கொல்லாமை எத்தனை குணக்கேட்டை நீக்கும்?” என்று காயுமானவர் இவ்வாறு உள்ளம்வியந்து உவந்து கூறி யுள்ளார். அரிய கவசீலமுடையவர் அருள் நீர்மையை மனித சமுதாயம் மருவி உய்ய ேவ ண் டு ம் என்று பெரிதும் உருகி யிருக்கிரு.ர். அவ் வுருக்கம் உரைகளாய் வந்துள்ளது. கொல்லா விரதம் ஒன்று கொண்டவரேநல்லோர் மற்று அல்லாதார் யாரோ அறியேன் பராபரமே!" (தாயுமானவர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/161&oldid=1326718" இலிருந்து மீள்விக்கப்பட்டது