பக்கம்:தரும தீபிகை 5.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71. .ெ கா ல 1701 - பரம்பொருளைநோக்கி உள்ளம் கரைந்து இவ்வாறு உரை யர்டியிருக்கிரு.ர். இந்தச் சொல்லாடலில் அவரது அருள் நீர்மை ஒளிவீசியுள்ளது. பொருள் நிறைந்த சொல் போதம் சுரங்தது. கொல்லாவிரதம் கொண்டவரே நல்லவர் என்ற கல்ை அல்லா கார் தீயவர் என்று சொல்லவேண்டும்; அவ்வாறு சொல்லவில்லை. யாரோ அறியேன் என்று அதிவிநயமாய் ஒதுங்கியிருக்கிருர் தீ யோர் என்று நேரே கூறினுல்கொல்லாவிரதம் கொள்ளாதவரது உள்ளம் வருந்தும், அவ்வாறு பிறர் மனம் வருந்தப் பேசுவதும் பிழையாம் என்னும் விழுமிய,நீர்மை அவர் மொழியால் ஈண்டு வெளியாயுள்ளது. கொல்லாமையைப் போதிக்க வந்தவர் தம் சொல்லாலும் அவ் விரதத்தைப் பேணி ஒழுகிவருவது கான வங் தக; இந்தப் போதனை நிலைமையைப் போதகர் பூண வேண்டும். f கொல்லாவிரதம் கொள்ளாதவரது நிலைமையை வாயால் சொல்லவும் கூசியுள்ளபடியை இங்கே கூர்ந்து ஒர்ந்துகொள்ளு கிருேம். மேலோர் மொழிகள் மெய் ஒளிகளாய் மிளிர்கின்றன. சீவகருணை கோய்ந்திருக்கிற அருளாளர் வாய்மொழி பொ ருள் பொதிந்து போதம் சுரந்து நீதிநெறிகளை நேரே வெளிசெய் துளது. உலகத்துக்குப் போதிக்க வருகிறவர் அப்போதனையின் படி தம் உள்ளமும் சாதனையடைந்திருக்க வேண்டும்; அவ்வாறு அமைந்திருப்பின் அப்போதனை அதிசய ஆற்றலுடையதாப் எவ ராலும் துதிசெய்யப்பெறும். இவ்வுண்மை ஈண்டு உணர வந்தது. "கொல்லா விரதம் குவலயம்எல் லாம்.ஒங்க எல்லார்க்கும் சொல்லுவது என்இச்சை பராபரமே!" உலக இச்சைகளை எல்லாம் அறவே ஒழித்துவிட்டுத் துறவி யாய் யோக சமாதியில் ஒதுங்கியிருந்த தாயுமானவரது உள்ளத் தில் ஒட்டியுள்ள இச்சையை இதில் உய்த்துணர்ந்து கொள்ளு கிருேம். கொல்லாவிரதம் எல்லாஉயிர்களையும் ஒல்லையில் ஈடேற்றி யருளும் ஆதலால் அதனைக் கைக்கொண்டு மனித சமுதாய்ம் உய்ய வேண்டும் என்று இங்ங்னம் உருகி வேண்டி யிருக்கிரு.ர். பிற உயிர்களுக்கு இதங்களே கருதி எவ்வழியும் அருள் புரிந்து வருக; அதனல் அரிய பல மகிமைகள் பெருகிவரும்: Nomistuimmii iussuui on

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/162&oldid=1326719" இலிருந்து மீள்விக்கப்பட்டது