பக்கம்:தரும தீபிகை 5.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1702 தரும பிேகை 708 கொல்லாமை என்னும் குணமுடையார் பாலெளிதா எல்லா உயர்வும் இனிதெய்தும்-கல்லார் அவரே அரிய அறகலங்கள் கொண்டார் எவரே அவரோ டெதிர். (க.) கொல்லாமை ஆகிய நல்ல அருளுடையாரிடம் எல்லாமேன் மைகளும் எளிதே வந்து அடையும்; அவரே இவ்வுலகில் மிகவும் நல்லவர்; அரிய புண்ணிய நலங்களை யுடையவர்; பெரிய புனித சிலர்; அவருக்கு நிகராக யாரும் யாண்டும் இலர் என்க. o கருமம் மனிதனை உயர்த்திவருகிறது; அதனை இழந்துள்ள அளவு அவன் இழிந்துபோகின்ருன். கன் உயிர் பொன் உயிராப் உயர்ந்து பேரின்ப நலங்களை அடையவேண்டின் அவன் எவ் வுயிர்க்கும் யாதொரு இங்கும் எண்ணலாகாது. தீமை நீங்கிவரச் சேமம் ஓங்கி வருதலால் அதன் பாங்கும் பயனும் அறியலாகும். ஈ எறும்பு முதலிய சிறிய பிர்ாணிகளுக்கும் சிறிதும் இடர் நேராமல் ஒரு மனிதன் கருதிஒழுகிவரின் அவன் பெரிய மகிமை களே அடைய நேர்கின்ருன். ஒருவனுடைய உயர்வெல்லாம் அவனுடைய இனிய பண்பாடுகளில் மருவியுள்ளன. உண்னும் உணவும், உடுக்கும் உடையும், படுக்கும்பாடும், நடக்கும் ДВ бр. Гயும் புனிதமாய் இனிமை கோய்ந்துவரின் அவன் புண்ணிய வானுய்க் கண்ணியம் தோய்ந்து கதிகலங்களை அடைகிருன். மன் அயிர் இகம்பெற நடந்து வருபவன் தன்னுயிர் பதம்பெறப் படர்ந்து வருகிருன் சீரிய அருள் பேரின்ப நிலையமாகிறது. 'ஒரறி வுயிர்களும் ஊறு உருமலே சீரம்ை அருள்கலம் செய்து வாழ்பவன் பேரறி வுடையவன் பெரிய நீதிமான் பாரடை பிறவிகள் பலவும் நீங்கினன்' பிறவுயிர்கள் துயர் உருவகை ஒழுகிவருபவனது விழுமிய நிலைமையை இது விளக்கியுள்ளது .ஒருவன் பிறவித்துயரம்.நீங்கிப் பேரின்ப்ம் பெறவேண்டுமாயின் அவன் யாண்டும் யாருக்கும் யாதொரு இடறும் செய்யலாகாது. சிறந்த அறிவுக்குப்பயன் இழிந்த புன்மைகளை நீக்கி உ ய ர் ங் த நன்மைகளைச் செய்து வருவதேயாம். இனிய செயல் அரிய மகிமைகளை அருளுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/163&oldid=1326720" இலிருந்து மீள்விக்கப்பட்டது