பக்கம்:தரும தீபிகை 5.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71. .ெ க 2ல 17 ll சொல்லான் அறிப ஒருவன்ே; மெல்என்ற ரோன் அறிப மடுவினே; யார்கண்ணும் ஒப்புரவி ன்ை.அறிப சான்ருண்மை; மெய்க்கண் மகிழான் அறிய கரு. (நான்மணிக்கடிகை, 78) மனிதர் நிலைகளை அளந்து அறிதற்குச் சில கருவிகளை இது வரைந்து காட்டியுளது. ஒருவன் சான்ருேன் என்பதை அவனது உபகார நீர்மையால் உணர்ந்துகொள்ளலாம் என விளம்பி நாகனர் இங்ங்னம் தெளிவாக நன்கு விளம்பியிருக்கிரு.ர். யாருக்கும் யாண்டும் அகிதம் செய்யாதே; எவ்வழியும் இதமாய் உதவியே செய்; அதனல்அரிய மேன்மைகளும் பெரிய நன்மைகளும் இனிய இன்பங்களும் உனக்கு உளவாம். -=-- ki o 706 உள்ளம் பதற உயிர்துடிக்க வெவ்வுதிர வெள்ளம் பெருக விளித்தல்தான்-எள்ளலுறும் வன்கொலேஎன் றெண்ணல் வசைபிறர்நேர் வைதாலும் புன்கொலே யாகும் புலே. -- -- (சு) இ-ள். - பிராணிகள் உள்ளம்பதறி உயிர்துடித்து அலற இரத்தவெள் ளம் சிந்தும்படி கொல்லுதல்தான் கொலை என்று எண்ணுகே; பிறர் அல்லலுறும்படி அவலமாக் கடிது சொல்லினும் அதுவும் கொடிய கொலேயாம் என்க. கொலை என்னும் சொல் தலைமையாக உயிர் வகையைக் குறித்து வருகிறது. உயிர்களின் துயரங்களை நோக்கியே பாவம், பழி என்னும் பயங்கர நாமங்கள் வந்துள்ளன. எங்கே இமிசை தோன்றுகிறதோ அங்கே பாவம் தோன்றுகிறது. பாவம் என் பது பவநோயைத் தருவது என்னும் ஏதுவான் வந்தது. சொல்லாலும் செயலாலும் எண்ணத்தாலும் இடர்கள் விளைகின்றன. இந்த மூன்றையும் நல்ல வழிகளில் செலுத்தினுல் நன்மைகள் பல உளவாகின்றன.அந்த மனிதன் நல்ல கருமவான் ஆகின்ருன். தீயவழிகளில் செலுத்தினுல் இங்குகள் விளைகின் மன; விளையவே அவன் தீயவனுயிழிகின்ருன். மனம் மொழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/172&oldid=1326729" இலிருந்து மீள்விக்கப்பட்டது