பக்கம்:தரும தீபிகை 5.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1712 தரும தீபிகை மெய்களைப் பழுதுபடுத்தாமல் வாழ்பவனே நல்ல பாக்கியவான்; அல்லாதவன் பொல்லாதவனப்ப் புலையுறுகின்றன்.

சொல்லால் வரும்குற்றம், சிந்தனையால்வரும் தோடம், செய்த பொல்லாத தீவினைப் பார்வையிற் பாவங்கள், புண்ணிய நூல் அல்லாத கேள்வியைக் கேட்டிடும் தீங்குகள், ஆயவும், மற்றும் எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்ப்னே!'

(பட்டினத்தார்) அல்லலான பிழைகள் சொல் முதலியவற்ருல் விளையும் என இதல்ை அறிந்துகொள்ளுகிருேம். எந்த வகையிலும் யாதொரு பிழையும் நேராமல் கன்னைப் பாதுகாத்து ஒழுகி வருகிற நீதிமா னே தீது நீங்கிய திவ்விய புருடன் ஆகின்ருன். ஒரு பிராணியைப் பிடித்து மனிதன் கொல்லும்பொழுது அதன் உள்ளம் பதறுகிறது; உயிர் துடிக்கிறது; வெருவி அலறு கிறது; உதிரம் வழிகிறது; அந்த அல்லல் நிலைகளை விழி எதிரே கண்டும் உள்ளம் இரங்காமல் மனிதன் கொல்லுவது அவனது கொடுமையையும் மடமையையும் தீய பழக்கத்தையும் விளக்கி நிற்கிறது. மானச மருமங்கள் இதில் மருவியுள்ளன. ஊனே உண்டுவருகிற ஈனப்பழக்கத்தால் பிறவுயிர்கள் படும் துயரங்களை உணர முடியாமல் குருடுபட்டுக் கொடுமைகளைச் செய்ய நேர்கின்ருன். தனது சுகத்தையும் கலத்தையுமே எவ் வழியும் ஆவலாய் காடி உழல்கின்றவன் பிறருடைய சுக துக்கங் களை ஒரு சிறிதும் கருதாமல் அறிவழிந்து போகின்ருன். சுய நலத்தால் மனம் மழுங்கி மதிமருண்டு போதலால் அந்த மனிதன் பழி பாவங்களுக்கு அஞ்சாமல் எதையும் துணிந்து செய்து தனக்கு ஊதியத்தையே விழைந்து கொள்கிருன். “Familiarity with exploitation is benumbing” [Kirby]

தன்னலமே கருதிவரும் பழக்கம் மனத்தைத் திமிர் ஆக்கி விடுகிறது” என்னும் இந்த ஆங்கில வாசகம் ஈங்கு அரியவுரியது. சுயநலமுடையவன் சுனே கெட்டு அயலார் நிலைகளை அறியாமல் அவலக்கேடுகளைச் செய்கிருன். பிறர்க்குச்செய்கிறகேடு கனக் கே கொடிய துயரமாய் வருதலை அவன் அறியாமல் அழிகிருன்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/173&oldid=1326730" இலிருந்து மீள்விக்கப்பட்டது