பக்கம்:தரும தீபிகை 5.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71. கொலை 1713 தன்னைப்போல் பிறரை எண்ணி ஒழுகுபவன் பெரியவன்; அவ்வாறு எண்ணுது இழிபவன் சிறியவன். பெருமையும் சிறுமையும் அருளிலும் மருளிலும் முறையே மருவியுள்ளன. சிறிய பிராணிகளிடமும் கருணைபுரிந்து ஒழுகிவ்ரின் அவ்வரவு பெரிய மேன்மைகளை அருளி வருகிறது. சீவ கயையால் மனிதன் மாதவன் ஆகின்ருன். பரிவு பெரிய தவமாகிறது. 'உயிர்க்கு உறுகண் செய்யாமை தவம்’ (குறள், 261) என்றது பொருள் பொதிந்த அருள்மொழி. கொடி செடிகள் வாடுவதைக் கண்டாலும் அருளாளர் உளம் அனுதாபமாய் வாடுகின்றது. பரிந்து இரங்குவது பரம நீர்மையா யுள்ளது. உயிர் நீங்கிய ஒரு பிரேதத்தை எடுத்துக்கொண்டுபோய்ச் சுடுகாட்டில் வைத்துச் சிலர் சுட்டனர். அப்பொழுது அவ் வழியே சென்ற இராமலிங்க சுவாமிகள் அதனைக் கண்டார். உள்ளம் உருகி மறுகியது. . ஒர் உயிர் நெடுநாள் வாழ இட மாயிருந்த இவ்வுடலை மண்ணில் மரியாதையோடு புதைக்கக் கூடாதா? இப்படித் தீயிலிட்டுச் சுட்டெரித்துச் சாம்பலாக்க வேண்டுமா?’ என்று துடித்துச் சென்ருர். புலையும் கொலையும் நீங்கி உலகம் என்று நலம் அடையுமோ? என்று பரிந்து வருந்தி ர்ை.அந்தப் பரிதாப நிலையில் நெடிது மறுகி நெஞ்சம் உருகினர்; பல பாடல்கள் பாடினர். சில அயலே வருகின்றன. புலேத்தொழிலே புரிகின்றீர்! புண்ணியத்தைக் கருங்கடலில் போக விட்டீர்! - கொலேத்தொழிலில் கொடியிர்! நீர் செத்தாரைச் சுடுகின்ற கொடுமை நோக்கிக் கலைத்தொழிலில் பெரியர்உளம் கலங்கினர்; அக் கலக்கமெலாம் கடவுள் நீக்கித் தலைத்தொழில்செய் சன்மார்க்கம் தலையெடுக்கப் புரிகுவது.இத் தருணம் தானே. (1) பிறந்தவரை நீராட்டிப் பெருகவளர்த் திடுகின்றீர் பேயரேர்ே இறந்தவரைச் சுடுகின்றீர் எவ்வனம்சம் மதித்திரோ? இரவில் துாங்கி 215

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/174&oldid=1326731" இலிருந்து மீள்விக்கப்பட்டது