பக்கம்:தரும தீபிகை 5.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71. .ெ க லை L715 இராமலிங்கருடைய மனநிலையும் சீவ தயையும் இந்தப் பாசுரங்களால்வெளியாகியுள்ளன. உயிர்நீங்கியசவத்தினிடமும் அவர் மனம் உருகி மறுகி இரங்கியிருப்பது கருதியுணர வுரியது. அசரப் பொருள்கள் மீதும் அருள்நிலை பரவி எழின் அங்கே ஒர் உயரிய பரநிலை ஒளிவீசுகின்றது. மலர்ந்த பூவைப் பறிக்கவும் மாதவரது மனம் கூசுகின்றது. அங்க அழகும் பசுமையும் அழிந்து போமே! என்று அவர் இரங்கி அயர்கின்றனர். உயிரைக் கொல்லுதல்கான் கொலை என்று கருதலாகாது; பிறர் உள்ளம் அல்லலுறும்படி சொல்லினும் அதுவும் ஒர் கொலை யாம். வசையாகப் பேசினலும், வைதாலும் வெய்ய துயர மாகும் ஆகலால் அவ்வாறு எவரையும் பாதும் பேசலாகாது. சொல்லாலும் அல்லல் நேராமல் நல்ல அருளோடு காடி ஒழுகி வருக. அது அரிய பல மேன்மைகளை அருளி வரும். 707 என்றும் துயரம் உருமல் இனிதிருக்க நன்ருேர் உபாயம் நயப்பினே-கன்றிே யாதும் பிறவுயிர்க் கல்லல் புரியற்க ஈதேமெய் யின்ப கிலே. (எ) இ-ள். - எவ்வழியும் யாதொரு துயரமும் நேராமல் யாண்டும் சுக மாய் நீ வாழ விரும்பின் பிற உயிர்களுக்கு ஒரு சிறிதும்.அல்லலே நீ கருதலாகாது; இதுவே நல்ல இன்ப வாழ்வுக்கு இனிய உபாயம்; இந்த வழியே ஒழுகி அந்தமிலின்பம் அடைக. தாம் சுகமாய் வாழவேண்டும் என்று விரும்பாக மனிதர் யாரும் இலர். யாவரும் சுக வாழ்வையே ஆவலோடு அவாவி வருகின்றனர். வரினும் கருதிய சுகம் கிடையாமல் பெரும் பாலும் மக்கள் மறுகி யுழலுகின்றனர். எண்ணிய இன்பம் எய் தாமல் ஏங்குவதும், எண்ணுக துன்பம் எய்தி வருந்துவதும் மனித வாழ்வின் பாங்குகளாய்ப் படிந்துள்ளன. சுகமும் துக்க மும் வினைகளால் விளைகின்றன. நல்வினை சுகக்கை அருளுகிறது; திவினை துக்கத்தைக் கருகிறது. இந்த மூல காரணங்களைச் சரியாகத் தெரியாமையினலேகான் பரிதாபங்கள் பெருகி வரு கின்றன. பிழைகள் பீழைகளை விளைத்து விடுகின்றன. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/176&oldid=1326733" இலிருந்து மீள்விக்கப்பட்டது