பக்கம்:தரும தீபிகை 5.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1716 த ரும தீ பி. கை பிற உயிர்களுக்கு அல்லல் நேராமல் நல்ல சீலமாய் ஒழுகி வரின் அவன் எவ்வழியும் உயர்நலங்களையே அடைகிருன்; அவ் வாறு ஒழுகாமல் வெவ்விய தீமைகளை விளைத்துவரின் யாண்டும் அல்லலும் இழிவும் அவலமுமே தொடர்ந்து வருத்துகின்றன. தான் விரும்புகிறபடியே பிறரும் சுகநலங்களை விரும்புவர்; அந்த விருப்பங்களுக்கு இடர் புரியலாகாது என்னும் உணர்ச்சி மனிதனுக்கு உயர்ச்சியாயிருக்கவேண்டும். இந்தச் சமநோக்கு மனித சமுதாயத்தில் சரியாக அமர்ந்துவிட்டால் பெரிய இன்ப வாழ்வு அங்கே இனிது அமைந்து கிற்கும். துன்பத்தொடர் பெல்லாம் அன்பு நலம் அற்ற அவலச் செயல்களாலேயே படர்ந்திருக்கின்றன. அன்பு நீங்கிய அளவே துன்பம் ஓங்கியது. தன்னை ஒருவன் இகழ்ந்து பேசிலுைம், இன்னல் செய்தா லும் தன் உள்ளம் துடிக்கிறது; உயிர் பதைக்கிறது; இக்க அனு பவ உணர்வையுடைய மனிதன் பிறர்க்கு இடர்செய்ய நேர்வது என்ன மதியினம்! அறியாமையால அல்லல்களைச் செய்து மனித சமுதாயம் எல்லையில்லாக துயரங்களை அடைந்து இழிந்து உழலு கின்றது. துன்பங்களை விளைத்துத் துடித்து அழிவது மடமையாம். பிறர்க்குச் செய்த சிறிய இடர்கள் தனக்குப் பெரிய படர் களாய் வருகின்றன. இந்த மருமத்தை நன்கு உணர்ந்தவன் தீய கருமத்தைக் கனவிலும் கருதான். - 'தன்னைத்தான் ஆக்கஎண்ணித் தான்பிறிது ஒன்றைக் கொல்வான் தன்னேத்தான் கொல்லுகின்ருன்; தன்.உயிர் விடுத்தும் ஒன்று தன்னேத்தான் கொல்லாதான்காண் தன்னே முன் நோக்குகின்ருன் தன்னேத்தான் நோக்கு கின்ற தத்துவர் இட்டம் ஈதால்.

  • - -ം (சிவப்பிரகாசம்) பிறிது ஒன்றைக் கொல்லுகின்றவன் தன்னையே கொல்லு கின்ருன் என்னும் இது ஈண்டு உன்னி உணரவுரியது. செய்க தீவினையாளன் எவ்வழியும் உய்தியிலனப் உறுதுயர் உழந்துபடு கின்ருன். தான் புரிக்க வினை தன்னையே வளைந்து கொள்கிறது.

ஓர்உயிர்தன்னேக் கோறல்செய் தோர்கள் உயிரினே அவ்வுயிர் எய்திக் சோர்வுறக் கொல்லும்; ஆதலால் கோற லாதல்மற்று ஒழிந்திட வேண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/177&oldid=1326734" இலிருந்து மீள்விக்கப்பட்டது