பக்கம்:தரும தீபிகை 5.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71. 6) ά π 8ου L725 விப் பயனப் பெற்ற பெரிய புண்ணிய சீலர்; அரிய கண்ணிய பேர்; இவ்வுண்மையை ஒர்ந்து உப்தி பெறுக என்பதாம். கான் சுகமாக வாழ விரும்புகின்றவன் எந்த உயிருக்கும் யாண்டும் யாதொரு துயரும் செய்யலாகாது. இந்த நியமம் தவறிகடந்தால் அந்த மனிதவாழ்க்கையில் அல்லல்கள்தொடர்ந்து அவலங்கள் புகுந்து அழிகேடுகள் படர்ந்து கொள்ளுகின்றன. தாம் செய்த செயல்களின் பலன்களை அனுபவியாமல் யாரும் அயலே மீறிப் போகமுடியாது. இயற்கை நியதியின் படியே யாவும் இயங்கி வருகின்றன. மனிதனுடைய எண்ணங் கள் நல்லனவாயின் நலமான இன்பங்கள் பலன்களாய் வருகின் mன; அவை தியனவாயின் தீமையான துன்பங்கள் செழித்து வளர்ந்து எவ்வழியும் வெவ்விய அவலங்களைவிளைத்து நிற்கின்றன. “In the soul of man there is a justice whose retributions are instant and entire.” H (Ethics) 'மனிதனுடைய சீவனில் ஒரு நீதியிருக்கிறது; அதனுடைய கரும பலன்களை உடனே முழுவதும் அதற்கு لنیٹی (لائے۔ ஊட்டிவிடு /ெ து” என்னும் இந்த ஆங்கில வாசகம் ஈங்கு ஊன்றி உணர வுரியது. அரிய வேக வாக்கியம்போல் இதுபோகனைபுரிந்துள்ளது. தாம்தாம்முன் செய்தவினே தாமே அனுபவிப்பார் பூந்தா மரையோன் பொறிவழியே--வேந்தே ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்ரு வெறுத்தாலும் போமோ விதி. (நல்வழி) செய்த வினைப்பயன்கள் சீவர்களை எவ்வழியும் வந்து சேர்ந்துகொள்ளும்; அவற்றை அவர் அனுபவித்தேயாக வேண் டும் என இது உணர்த்தியுள்ளது. இனிய வினைகளைச் செய்த வன் இன்பங்களை நுகர்ந்து மகிழ்கிருன்; கொடிய செயல்களைச் செய்தவன் துன்பங்களை அனுபவித்துத் துயரில் உழல்கின்ருன். ஒருவன் நல்ல கருமங்களைச் செய்யின் அவன் நல்லவனப் உயர்கின் முன். தீயவினைகளைச் செய்யின் தீயவனப் இழிகிருன். | Io, who does a good deed, is instantly ennobled. He who does a mean deed, is by the action itself contracted. [Emerson] 'கல்வினைசெய்பவன் அகனல் உடனே மேன்மை அடைந்து ஒளிபெறுகின்றன்; தீவினை செய்வன் அகல்ை தாழ்ந்து இழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/186&oldid=1326743" இலிருந்து மீள்விக்கப்பட்டது