பக்கம்:தரும தீபிகை 5.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1736 த ரும தி பி கை மனிதனுடைய உயர்வுக்கு உரிய இனிய இயல்புகளுள் கானம் கலை சிறந்தது. தன்னைக் காணியாக் கொண்டவனைக் கோடி கலங்கள் கொள்ளும்படி பீடும் பெருமையும் தருவது. பட்டி மாடுகள் புகாதபடி தடுத்து வேலி பயிரைக் காத்து வரு கல்போல் கெட்ட தீமைகளை விலக்கி நாண் உயிரைக் காத்து வருகிறது. இதனையுடையவர் எல்லா மேன்மைகளையும் எளிதே அடைந்து யாண்டும்பெருமையாய் உயர்ந்துகொள்ளுகின்றனர். ஊண்உடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல நானுடைமை மாந்தர் சிறப்பு. (குறள், 1012) ஒத்த பிறப்பினையுடைய மக்களுள் நானுடைமையை உரி மையாக அடைந்தவரே தனிமையான சிறப்பினை அடைகின்ருர் என இது உணர்த்தியுளது. பொன்னினும் மணியினும் உயர் வாகப் போற்றி நானே அரிய பூண் ஆகப் புனைந்து கொள்ள் வேண்டும் என்பார் நாணுடைமை என்ருர். இந்த அணி இல்லை யாளுல் அந்த மனிதன் உயிர் அழகு குன்றி அவலட்சணமர்ப் இழிந்து நிற்கின்ருன். அவலநிலை அல்லல் தோய்ந்து கின்றது. காண்வேலி, நாண்உடைமை எனத் தேவர் குறித்திருக்கும் குறிப்புகள் கூர்ந்து சிந்திக்க வுரியன. தன்மையும் தகவும் நன் மைகளை நோக்கி நலம் பல துலக்கி வந்திருக்கின்றன. பழிபாவங்கள் நேராமல் கன்னைப் பாதுகாத்து விழுமிய ளுக்கி வருகலால் ஒருவனுக்கு நாணம் உயிரின் அணியாய் ஒளி மிகுந்துள்ளது. ஆன்ம அழிகு அதிசய எழிலாப் அமைந்தது. தீய காரியங்களைச் செய்ய நாணி உள்ளம் கூசி ஒதுங்கும் ஒடுக்கமே நானம் ஆக்லால் அதனையுடையவர் எவ்வழியும் தாய வராய் மேன்மைகளையே அடைகின்ருர். இத்தகைய நாணம் இல்லாதவர் விணராய் விரிந்து வெய்ய பழிகளைச் செய்ய நேர்' கின்ருர் தேரவே பாவிகளாய் இழிந்து அவர் பாழ்படுகின்றனர். எவன் பழிபாவங்களைச் செய்ய நானுகின்ருனே அவன் புகழ் புண்ணியங்களை அடைய உரியவனகிருன். ைேமக்கு அஞ்சிய அளவு நன்மைக்கு வருகின்ருன். கல்லோர் எவ்வழியும் பொல்லாத பழிகளை அஞ்சி ஒழுகுகலால் அவர் வாழ்வு புகழால் பொலிந்து புண்ணியத்தால் உயர்ந்து கண்ணியமாய் விளங்குகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/197&oldid=1326755" இலிருந்து மீள்விக்கப்பட்டது