பக்கம்:தரும தீபிகை 5.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72. பழி 1737 கடைஎல்லாம் காய்பசி அஞ்சும் மற்றுஎன இடைஎல்லாம் இன் ைைம அஞ்சும்.--புடைபரந்த விற்புருவ வேல்.நெடுங் கண்ணுய்! தலைஎல்லாம் சொற்பழி அஞ்சி விடும். (நாலடியார், 297) பொதுமக்கள் பசி வறுமைகளுக்கு அஞ்சுவார்; தலைமக் கள் பழிக்கு அஞ்சுவர் என இது குறித்துள்ளது. உத்தமர், மத்திமர், அகமர் என உலக மக்களை மூன்று வகையாக வகுத்து அவருடைய நிலைமை தலைமைகளே உணர்த்தி யிருப்பது உய்த்து உணரத் தக்கது. பழி அச்சம் விழுமிய உச்சம் ஆகிறது. உயர்ந்த மனிதனுக ஒருவன் ஆக வேண்டுமானல் இழிந்த பழிகளை யாதம் அணுகாமல் நீதியோடு அவன் ஒழுகி வர வேண்டும். அக்க ஒழுக்கம் அதிசய நிலையில் உயர்த்தி வரும். தன் வாழ்வில் புகழ் விளைந்துவர எவன் வாழ்ந்து வருகின் ருனே அவனே உயர்ந்த ஆண்மகன், சிறந்த மேன்மகன்; அல் லாகவன் இழிந்தவனுகியே கழிந்து போகின்ருன், உயிர் இருக் தாலும் அவன் அழிக்கவனே ஆகின்ருன். எவ்வளவு அழிதுயரங்கள் நேர்ந்தாலும் பழி வழிகளில் இழியாமல் விழுமியோர் ஒழுகி வருகலால் அவர் புகழ் ஒளி மிகுந்து புண்ணிய பதிகளாப் உயர்கதிகளை அடைகின்ருர். வழிகெட வரினும் தத்தம் வாழ்க்கைதேய்ந்து இறினும் மார்பம் கிழிபட அயில்வேல் வந்து கிழிப்பினும் ஆன்ருேர் கூறும் மொழிகொடுவாழ்வது அல்லால் முறைகெடப்புறம்கின்ருர்க்கும் பழிபட வாழ்கிற்பாரும் பார்த்திபர் உளரோ பாவம்! --- (இராமா, மாயாசனக, 66) தன் தந்தையாகிய சனகன் போலவே மாய வடிவம் பூண்டு வந்து இராவணனே டு இசைக்து வாழும் படி தன்னை வேண்டிய வஞ்ச வேடனை நோக்கிச் சீதை இவ்வாறு கூறியுள் ளாள். பெற்ற தந்தை என்றே முற்றும் நம்பிப் பரிகபித்துத் தடித்தவள் அவனுடைய பழிமொழியைக் கேட்டதும் விழி சிவந்து வெகுண்டு இப்படிக் தெளிவோடு விளம்பி நின்ருள். குடி அழிக் த குலம் அடியோடு ஒழிய மூண்டாலும், உடல் சிதைந்து உயிர் போக நேர்ந்தாலும் அரசர் பழிபட வாழார் 218

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/198&oldid=1326756" இலிருந்து மீள்விக்கப்பட்டது