பக்கம்:தரும தீபிகை 5.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L744 த ரும தீ பி. கை தெளிவாக வெளிப்படுத்தி நிற்கிறது. வாய்மை தப்பினர்கள் இந்த மானிலத்தில் ஈனராய்த் திய்மையுற்று மேலுளோர் பழிக்கவே திரிந்துபின் அாய்மையற்ற கும்பியுள் துளைந்து அழுங்குவார் என வாய்மனுப் பகர்ந்த வேத சாகைமுற்றும் அறையுமே. ■ (பிரமோத்தரகாண்டம்) பொய்யர் பழி தரகு அடைவர் என இது குறித்துள்ளது. களவு பொய் கு து முதலிய பழி நிலைகளே நீங்கி விழுமி யோனப் வாழுக. அவ்வாழ்வு எவ்வழியும் தெய்வீக இன்பமாம். 717. கள்ளன் எனும்பேர்தான் காதிலுறக் கேட்டாலும் உள்ளம் கசந்துள் உளயுமே-கள்ளப் பழிமக்கள் அந்தப் படுவினையைச் செய்தேன் அழிகின்ருர் அங்தோ அவம். (στ) இ-ள் கள்ளன் என்னும் பெயரைக் காதில் கேட்டாலும் உள். ளம் உளைந்து உயிர் வருந்துகிறது; பொல்லாத இழிவான அக்கக் களவைச் செய்து மனிதர் பழியடைந்து பாழாப் அழிவது கொடிய பரிதாபம் என்பதாம். இழிவான செயல்களால் பனிகன் பழிபா வங்களே அடை க்க பாழாகின்ருன். கள்வன், திருடன், சோரன் என்னும் மொழிகள் பழியான பெயர்களாய் இழிவு குறித்து வந்துள் ளன. பிறர் வருக்தி ஈட்டி வைத்த ள்ள பொருளைக் கரவாய்ப் புகுந்து கவர்ந்து போபவன் கள்வன் என நேர்ந்தான். ஆகவே சமுதாயத்துக்கு அவன் எவ்வளவு கொடிய திய நோய் என் பது எளித தெளிவாம். ஈனச் செயலால் மானம் மரியாதைகளை அடியோடு இழந்து அவன் குடியோடு இழிந்து அழிக் கான். களவு அழகைக் கெடுக்கும். என்பது பழமொழி. கள்ளன் என ஒருவனச் சுட்டிச் சொல்லின் அது எள்ளல் இளிவுகளைக் கட்டிக் காட்டி ஈன நிலையை நீட்டி நிற்கும். எல்லாரும் வெறுத்து இகழுகின்ற பொல்லாத களவைத் தழுவி இழிவது அவலக் கேடாய்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/205&oldid=1326763" இலிருந்து மீள்விக்கப்பட்டது