பக்கம்:தரும தீபிகை 5.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72. பழி 1745 உள்ளத்தால் உள்ளலும் இதே பிறன்பொருளேக் கள்ளத்தால் கொள்வேம் எனல். (குறள், 282) களவை மனதால் நினைத்தாலும் பாவம் எனத் தேவர் இவ் வாறு பரிந்து கூறியிருக்கிரு.ர். தீதே என்ற ஏகாரத்தில் தொனித் திருக்கும் தொனிப் பொருளை துணித்து உணர வேண்டும். நெஞ் சால் நினைத்தாலும் அந்த உயிரை சாசப்படுத்துகிற சேத் தீமை யைக் கூசாது செய்கின்ருரே! ஐயோ! எவ்வளவு மதியினம்! எத்தனைக் கேடு! என்று தெய்வப் புலவர் பரிதவித்திருக்கிரு.ர். பழி நிலையில் இழிந்து பாழாப் அழிகின்ருமே! என்று அவரது அழிவு நிலைக்கு இரங்கி யிருப்பது துணுகி உணர வந்தது. களவினல் பழியும் துயரமுமே அன்றி வேறு யாதொரு பலனும் கிடையாது. அதல்ை ஒரு வேளை பொருள் சேர்ந்தாலும் அது விரைந்து அழிந்து அவலக் கேடாகவே முடிந்து விடும். “Thefts never enrich.” (Emerson) களவுகள் ஒருபோதும் செல்வத்தை உண்டாக்கா” என எமர்சன் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். தன்னை வஞ்சித்துக் கவரும் கள்வனைச் செல்வம் எள்ளி வெறுத்து இகழ்ந்து போதலால் அவன் ஏமாந்து ஈனத் துயரங்களையே அடைந்து நிற்கின்ருன். திருடு அறிவைக் குருடு படுத்தி விடுதலால் அங்க உயிர்வாழ்வு எவ்வழியும் இருளாய் மருள்மண்டி மயஅழந்தே உழலுகின்றது. "குற்றம் உள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்” என்னும் பழமொழி யால் கள்ள மனத்தின் அல்லல் நிலையை அறிந்து கொள்ளலாம். L “Suspicion always haunts the guilty mind: The thief doth fear each bush an officer.” (King Henry 6) குற்றமுள்ள மனத்தைச் சந்தேகம் எப்பொழுதும் வேட் டையாடுகிறது; தன்னைப் பிடிக்க வருகிற காவலாளி என்று புல்புதர்களையும் கண்டு கள்ளன் அஞ்சுகின்ருன்' என்னும் இது இங்குஅறியவுரியது. நெஞ்சம் கலங்க கெடுத்துயர்களாகின்றன. அல்லலும் திகிலும் அச்சமும் கள்ளன எப்பொழுதும் கொல்லாமல் கொல்லுகின்றன; அப்படியிருக்தம் அக்கப் பொல் லாக பழியில் இழிந்து புகுந்து அவன் புலையாடி அலேகின்ருன், 219

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/206&oldid=1326764" இலிருந்து மீள்விக்கப்பட்டது