பக்கம்:தரும தீபிகை 5.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1746 த ரும தி பி கை களவு நிலையில் அகப்பட்டால் கள்ளன் அடியும் மிதியும் பட்டு அவமானம் அடைகிருன்; அரச கண்டனையுறுகிருன்; மறுமையில் கொடிய நரக வேதனையில் அழுந்தி ருைந்து படுகி முன். களவால் இவ்வாறு பழி துயரங்கள் தொடர்ந்து அடர்ந்து வருதலால் அதனை ஒழிந்து ஒழுகும்படி மேலோர் பரிந்து உணர் த்தியுள்ளனர். உரைகள் ஒளி புரிந்து வந்துள்ளன. முளரிமுக காகமுளே எயிறுழுது கீற அளவில் அதுயர் செய்வர் இவண் மன்னவர்கள் நாளும் விகளவரிய மாதுயரம விழ்கதியுள் உய்க்கும் களவுகட கைக் கடிந்திடுதல் சூதே. (சீவகசிந்தாமணி) பிளவுகெழு வெழுநரகம் எரிகொளுவல் ஈர்தல் உளேயவுடல் தடிவொடு அறு அயரம் விளேவிக்கும் கிளேயறவு தரும்அரிய புகழினே அழிக்கும் களவுனி விடுதல் அறம் என்ஆறு கருதென ருன். = (சாக்தி புராணம்) களவில்ை இவ்வாறு அளவிடலரிய துயரங்கள் உளவா கின்றன; அப் பழி கிலேயில் இழியாமல் வாழ்வதே நலமாம் என இவை குறித்திருத்தலைக் கூர்ந்து நோக்குக. கள்ளரை யானைக் காலில் இடுவதும், அதன் கொம்பால் குத்திக் கொல்லச் செய்வ தும் பண்டு இக்காட்டில் அரச தண்டனையாயிருந்து வந்துள்ள மையை காகம் எயிறு உழுது கீற என்றகளுல் அறிந்து கொள்ளு கிருேம். இழிவும் அழிவும் களவால் விளைகின்றன. எள்ளாமை வேண்டுவான் என்பான் எனத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு. (குறள், 281) கள்ளாமை வேண்டும் கடிய வருதலால்; தள்ளாமை வேண்டும் தகுதி யுடையன; கள்ளாமை வேண்டும் சிறியாரோடு; யார் மாட்டும் கொள்ளாமை வேண்டும் பகை. (கான்மணிக்கடிகை, 87) இவற்றை ஈண்டு உள்ளி உணர வேண்டும். எள்ளல் இழிவுகள் நேராமல் நல்ல மேன்மையை ஒருவன் அடைந்து வாழ வேண்டும் ஆனல் கள்ளாமையை விரதமாகக் கருதிப்பேணி உறுதியோ டு யாண்டும் அவன் ஒழுக வேண்டும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/207&oldid=1326765" இலிருந்து மீள்விக்கப்பட்டது