பக்கம்:தரும தீபிகை 5.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1748 த ரும தி பிகை அயலானுடைய மனையாளை ஒருவன் மயலாப் விரும்புவது கொடிய பழியாம். நெறிகேடான இந்த விழைவால் பல ைேம கள் விளைகின்றன. மனித சமுதாயம் சேமாய் நாசமடைவதற்கு விபசாரமே மூலகாரணமாயுள்ளது. பிறனுடைய மனைவியை ஒருவன் விழைய நேரின் அவனுடைய மனைவி அயலானைத் தழுவ ேேர்கின்ருள். தலைமையான நிலையிலுள்ளவர் தவறு செய்வது பலரையும் பழிச்செயல்களைச் செய்யத் தாண்டுவது போலாம். ஒரு பழி பல பழிகளுக்கும் வித்தாய் விரிகிறது. தொத்த கோப் போல் அது விரைந்து பாவித் தேசத்தைப் பாழாக்கி விடுகிறது. கெட்ட நடத்தைகளால் மனித இனம் கெட்டுக் கேடாப் மாப்ந்து போகிறது. கேடுகள் நாடுகளை நாசம் செய்கின்றன. பெண்மை கற்பால் பெருமை பெறுகிறது; ஆண்மை சீலத் தால் மேன்மை அடைகிறது. கற்பும் சீலமும் இருபாலேயும் அற்புத நிலையில் உயர்த்துகின்றன. இந்தப் புனித நீர்மைகளை மருவி வரும் அளவே மனித மரபு மாண்பாப் உயர்ந்து வரு கிறது. வழுவிய பொழுது பழியும் பாவமும் கழுவி இழிவுறு கின்றது. உறவே எவ்வழியும் அழிவுகள் விளைகின்றன. தருமநீதிகளை உணர்ந்து நெறி நியமங்களோடு ஒழுகி வரு பவர் விழுமியராய் விளங்கி மிளிர்கின்ருர். சிறந்த தன்மைகள் அமைந்த போதுதான் மனிதன் உயர்ந்தவன் ஆகின்றன். ஒழுக் கத்தால் உயர்கின்ருன்; இழுக்கத்தால் இழிகின்ருன். கல்வி நல்ல அறிவுகள்ை நல்கி மனிதனே மகிமைப் படுத்து கின்றது; அதனை இளமையிலிருந்தே பழகித் தெளிந்து கொள் வது சிறந்த மேன்மையாம். கல்லாது கழிந்து கின்ருல் பொல் லாத மிருகமாய் அவன் இழிந்து படுகின்ருன். பழி கிலேயாளரை இழுதை முதலிய இழி மொழிகளால் வரை க்த குறித்தது அவருடைய ஈன நிலைகளைத் தெளிவாகத் கெரிக் து கொள்ள. குறிப்பு மொழிகள் கூர்ந்து நோக்க வுரியன. இழுதை=பேதை, பேடி, பேயன். கடலே= கபடன், தீயவன், தார்த்தன்.

கலதி=மூதேவி, மடையன், முட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/209&oldid=1326767" இலிருந்து மீள்விக்கப்பட்டது