பக்கம்:தரும தீபிகை 5.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1560 தரும பிே கை கத்தரிக்கோல் மெல்ல அணைப்பது போல் தழுவி இரண்டு துண்டாப் வெட்டித்தள்ளும்; அது போல் நயவஞ்சகர் இனிய வர்போல் நெருங்கி அழிகேடுகள் செய்துவிடுவர் ஆதலால் அது அவர்க்கு உவமையாய் வந்தது. "செங்கமலப் போதலர்ந்த செவ்விபோலும் வதனம்; தங்குமொழி சந்தனம்போலும்;-பங்கிஎறி கத்தரியைப் போலுமிளங் காரிகையே வஞ்சமனம் குத்திரர்பால் மூன்று குணம்” (திேசாரம்) வஞ்சகருடைய கிலேமையை இது நன்கு விளக்கியுள்ளது. இவ்வாறு செவ்வியர் போல் தோன்றி எவ்வழியும் அவர் கொடி யராயிருக்கலால் அவரை யாதும் அனுக விடாமல் தம்மைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நச்சுநீர்ப் பாழ்ங் கூவல். வஞ்சநெஞ்சரை நம்பிநெருங்கினல் நாசம் நேரும் என்ப தைத்தெளிவாகஉணர்த்த இவ்வுவமானம்வந்தது.கூவல்=கிணறு. காட்டில் ஒரு பாழ்ங்கிணறு, அதன்மேல் எங்கும் இனிய பசும்புல் கன்கு படர்ந்திருந்தது; உள்ளே நச்சுப்புழுக்கள் கிறை க்த அழுகல் நீர் கிடந்தது; அங்குமேயச் சென்ற ஆடு அந்தப் பசியபுல்லைக் கண்டது; காணவேஆவலோடு விரைந்து போயது; கிணற்றுள் விழுந்தது; பதைத்து இறந்தது. வஞ்ச கெஞ்சரை நம்பி_நெருங்கினுல் இவ்வாறே அழிவு நேரும் ஆதலால் தெளிவோடு விலகி ஒழுகுக. உரை செயல்கள் வெளியே இனியன போலத் தோன்றி லும் நயவஞ்சரது நெஞ்சம் கொடியதா யிருக்கும் ஆதலால் பசும்புல்லும், பாழ்ங்கினறும் உவமைக் குறிப்புகளாய் கின்றன. நச்சுநீர் என்றது எண்ணங்களின் இழி கொடுமையைக் கண்ணும் கருத்தும் காண. உள்ளத்தில் வஞ்சனைகள் கோய்ந்த பொழுது அந்த மனிதன் நஞ்சமாய்நீண்டு நாசங்கள் செய்ய நேர்கிருன். வஞ்சகரினும் கய வஞ்சகர் மிகவும் கொடியர், அவரை நெருங்க விடாமல் நிலை தெரிந்து ஒழுகுக. 'வஞ்சனைகள் செய்வாரோடு இனங்க வேண்டாம்' என உலகநீதி இவ்வாறு உணர்த்தியுள்ளது. நெஞ்சைப் புனிகமாப் பேணிக் கொள்ளுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/21&oldid=1326578" இலிருந்து மீள்விக்கப்பட்டது