பக்கம்:தரும தீபிகை 5.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66. கா வு 1561 659. கண்ணுக் கினிதாய்க் கவினெய்தி நின்ருலும் உண்ணற்கின் தைாய் உயிர்க்கேடு-பண்ணுகின்ற எட்டிக் கனிபோல் இருந்தழிவே செய்குவார் பட்டிமக்கள் ஒட்டல் பழி. (9) இ-ள். எட்டிப் பழம் பார்க்க அழகாய் இருக்கும்; தி ன் ரு ல் உயிர்க் கேடு செய்யும்; அதுபோல் உருவத்தோற்றத்தில் இனி யராய்த் தோன்றிலுைம் நெஞ்சில் வஞ்சமுடையவர் நஞ்சு போல் காசமே செய்வர் என்க. கவின் = அழகு. கண்ணேக் கவரும் வனப்பு கவின் என வந்தது. உள்ளம் கவியச் செய்வது என்னும் க | ர ன மு. ம் அமைந்தது. காட்சியின் கவர்ச்சி கருத நேர்ந்தது. வெளியே நல்லவர்போல் கோன்றினும் உள்ளம் கரவாயுள் ளவர் பொல்லாத அல்லல்களையே புரிவர் ஆதலால் அவரை அணுகிப் பழகாமல் விலகி ஒழுகுவதே எவ்வழியும் இனிதாம். வெளி மினுக்கு விழி மயக்காப் இழி துயர்களை விளைத்து விடும்; ஆகவே அது மிகவும் அஞ்சத் தக்ககாப் கின்றது. விளக்கின் ஒளியில் வீழ்ந்து விட்டில்கள் மடிவதுபோல் வஞ்சகர் வலையில் சிக்கி மாய்ந்தவர் பலர். இனியவர்போல் நடித்து இன்னுமைகளைச் செய்பவர் தீயவர் எவரினும் யேராவர். பட்டிமக்கள் என்றது களவு வஞ்சனேகளையே பழகி யாண் டும் அழிதுயர்களேச் செய்யும் இழிநிலையாளரை. பட்டி = கரவு, கள்ளம். திருடர்களைப் பட்டிகள் என்பது குட்டநாட்டு வழக்கு. அகப்பட்டி யாவாரைக் காணின் அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். (குறள், 1074) இதில் பட்டி சுட்டி கிற்கும் குறிப்பைக் கூர்ந்து நோக்குக. பட்டிகளைக் கயவர் கீழ்மக்கள் எனத் தேவர் சுட்டிக் காட்டி யிருப்பதை இதில் நாம் உய்த்துணர்ந்து கொள்ளுகிருேம். புன் மை படிந்து அயலாறை வஞ்சிக்கும் இயல்பு பட்டி என வந்தது. விளை புலன்களில் கரவாய்ப் புகுந்து பயிர் முதலியவற்றை மேயும் காலியைப் பட்டிமாடு என்டர். வேலியிட்டு எவ்வளவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/22&oldid=1326579" இலிருந்து மீள்விக்கப்பட்டது