பக்கம்:தரும தீபிகை 5.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1562 தரு ம தி பி கை பாதுகாப்புக்களை செய்துவந்தாலும் கள்ளமாடு உள்ளேபுகுந்து கரவாய்க் கவர்ந்து தின்னும்; அதுபோல் வஞ்சகரும் சமையம் பார்த்து உள்ளம் துணிந்து கள்ளம்புரிவர் ஆதலால் அவர் பட்டி என நேர்ந்தார். "தடுக்குகர்க்கு அடங்காது இடுக்கண் செய்யும் பட்டி அஞ்சினுக்கு அஞ்சி." (மருதுரர், மும்மணி 10) நோதக்க செய்யும் சிறுபட்டி’ (குறிஞ்சிக்கலி, 15) பட்டியின் செயல் இயல்களை இவை சுட்டிக் காட்டியுள்ளன. கள்ளம் படிக்க நெஞ்சர் பிறர் நொந்துபடுமாறு அல்லல் புரிவர் ஆதலால் அவரைச் சேரவிடுவது தீரா இடும்பையாம். பட்டிமக்கள் எட்டிக்கனி. என்றது வெளிமினுக்கையும் உள்ளக் கள்ளத்தையும் உய்த்துணர்ந்து உறுதி காண வந்தது. உள்ளே நஞ்சையுடைய எட்டிக்கனி வெளியே அழகாய்த் தோன்றும்; அத் தோற்றத்தில் மயங்கி அகனே விரும்பி உண் டால் உயிர்க் கேடு விளையும். நெஞ்சில் காவுடைய வஞ்சகரும் அவ்வாறே அழிவு செய்வர் ஆதலால் அப் பழிகேடரை அறவே ஒழியவிட வேண்டும் என்க. பட்டி மாடு எனத் திரிதரு மடவார் பாழ்ங்குழிக்குள் வீழ்ந்து ஆழ்ந்திளேக் கின்றேன் தட்டி லார்புகழ் தணிகையை அடையேன் சம்பு என்னும்ஒர் தருவொளிர் கனியே! ஒட்டி லேன்கினே உளத்திடை கினேயேன் உதவு ருதுகச் சுஅமரம் ஆனேன் எட்டி என்முனம் இனிப்பு அறும் அந்தோ என்செய்வான்பிறந் தேன்எளி யேனே. (அருட்பா) பட்டியும் எட்டியும் இதில் ஒட்டி வந்திருக்கலறிக. மனத்தில் கரவு படிந்தவுடன் மனிதன் கொடியனப் இழிக் துபடுகிருன். வஞ்ச செஞ்சனுடைய மொழிகளும் செயல்க ளும் தீய வழிகளிலேயே செல்லும் ஆதலால் நன்மைகளை இழந்து பழி பாவங்களையே அடைகிருன். “He that hath a froward heart findeth no good.” (Bible). மனம் மாறுபட்டவன் நல்லதைக் காணுன்’ எனச்சால

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/23&oldid=1326580" இலிருந்து மீள்விக்கப்பட்டது