பக்கம்:தரும தீபிகை 5.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66. க ர வு 1563 மன் என்பவர் இவ்வாறு கூறியுள்ளார். உள்ளம் பிழைபடின் அந்த உயிர் வாழ்வு அழி துயரங்களையே அடைந்து அலமாலுறு கின்றது. பிழையாளர் பீழைகளையே பெருக்கி அழிகின்ருர். இழிந்த வஞ்சனைகளால் தம் நெஞ்சத்தை நீசமாக்கி வாழ் வைப் பாழாக்கிவிடுதலால் வஞ்சனையாளர் தம்மையே கொல் லும் பொல்லாத கொலையாளராய்ப் புலையாடி நிற்கிரு.ர். களவு வஞ்சனே காமம்என்று இவைஎலாம் காட்டும் அளவு மாயையிங் காரெனக் கமைத்தனர் ஐயா! உளவி லேயெனக் குள்ளவாறு உணர்த்தின் உன் அடிமை வளரு மாமதி போல்மதி தளர்வின்றி வாழ்வேன். (தாயுமானவர்) துளய பரநிலையை அடைய ஒட்டாதபடி களவு வஞ்சனைகள் மாயை மயக்கங்களாப் மருவியுள்ளன; அவற்றை ஒ. பூழி த் து உய்தி பெறவேண்டும் எனத் தாயுமானவர் இவ்வாறு வாப் மலர்ந்துள்ளார். புலை ஒழிந்தவர் நிலை உயர்ந்து திகழ்கின்ருர். 660. கள்ளமிலா உள்ளமே காணும் கதிகலத்தைக் கள்ளமலி யுள்ளம் கடையாகி-எள்ளலொடு பாவம் பழிதுயரே பார்க்கும் அழிதொடர்பை ஒவல் ஒழிக. வுடன். (Ꮿ) இ-ள். கள்ளம் இல்லாத உள்ளமே உயர்ந்த கதிகலங்களைக் கானும், கள்ளம் உடையது எள்ளலடைந்து இழிதுயரங்களையே எய்தும், அழிகேடுடைய அதனை ஒழிய விடுக என்பதாம். நல்ல சிந்தனைகள் அமுதத்துளிகள் போல் இனிமை சுரங்து மனிதனுக்கு மகிமை புரிந்து வருகின்றன. தீய எண்ணங்கள் கொடிய நஞ்சுகளாய் யாண்டும் அழிதுயரங்களையே விளைத்து அடுகின்றன. உள்ளம் பிழைபட ஊனங்கள் விளைகின்றன. கரவு வஞ்சனைகளால் நெஞ்சம் சேமாய் நாசமடைகிறது. ஆகவே நீசன் நாசன் என மனிதன் நிலையழிந்து ஒழிகின்ருன். தீய நினைவுகளால் மனம் மாசுபடிந்த பொழுது மனிதன் இயவனப் இழிந்து படுகிருன், படவே யாதொரு நன்மையும் அடையாமல் அவன் அகியாயமாப் அழிந்தே போகிருன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/24&oldid=1326581" இலிருந்து மீள்விக்கப்பட்டது