பக்கம்:தரும தீபிகை 5.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72. பழி 1751 காலத்தில் சீட்டு ஆட்டம் நேர்ந்திருக்கிறது. பிராஞ்சு தேசத்திலி ருந்து ஒர் ஆண்டில் மட்டும் ஒரு கோடி ரூபாய்களுக் குச் சீட்டுக் கட்டுகள் இந்தியாவுக்கு வந்திருக்கின்றன. அங்கக் கேட்டுக் கட்டுகளால் இந்த நாட்டு மக்கள் எப்படிக் கெட்டு வருகின்ருர்! என்பதை உய்த்துணர்ந்து கொள்ளலாம். குடிகாரன், கள்வன், பொய்யன் என்பதுபோல் சூதாடி என்னும் பெயரும் இழிவு குறித்து வருகிறது. பழியான இந்தச் சூதாட்டத்தில் சகுனி மிகவும் வல்லவன். பொல்லாக வஞ்சக னை அவன் பலவகையான சூழ்ச்சிகளைச் செய்து கருமரை நயமாக அழைத்துக் கன்னெடு பொழுது போ க்குக்காகச் சிறுது நேரம் குது ஆடும்படி சுமுக்மா ப் வேண்டினன். அவ னு டைய குறிப்பை அறிந்த கருமன் சூ காடலை எள்ளி இகழ்ந்து உள்ளம் நொந்து கூறினன். அவ்வுரைகள் அயலே வருகின்றன. அடியும்தன் மையும்வலிமையும்சேனேயும்,அழகும்வென்றியும்தத்தம் குடியும் மானமும் செல்வமும் பெருமையும் குலமும் இன்பமும் தேசும் படியு மாமறை ஒழுக்கமும் புகழும்முன் பயின்ற கல்வியும் சேர மடியுமால் மதியுணர்ந்தவர் சூதின்மேல் வைப்பரோ? மனம் வையார். குழகராப் இள மடங்தையர்க்கு உருகுவோர் குறிப்பிலாமையின ளும் பழகுவார் மிகச் சிங்தைநோய் தாங்களே படுக்குமாறு உணராமல் அழகு பேரறி வாகவே கொண்டவ அறத்தொழில் புரியாமல் கழகம் ஆடவும் பெறுவரோ? இதனினும் கள்ளுண ல் இனிதன்றே.(2) மேதகத்தெரி ஞான நூல் புலவரும் வேத்து நூல் அறிந்தோரும் பாதகத்தில் ஒன்று என்னவே முன்னமே பலபடப் பழித்திட்டார்; தி.தகப்படு புன் தொழில் இளேஞரிற் சிந்தனே சிறிதின்றித் தோதகத்துடன் என்னேயோ சகுனிதன் சூதினுக்கு எதிர்-என்ருன். (3) (பாரதம்) சூதாடலால் நேரும் பழி துயரங்களைக் குறித்துத் தருமன் இவ்வாறு பரிந்து உரைத்திருக்கிருன். தோதகன் என்று சகுனி யைச் சுட்டியிருப்பது அவனுடைய கெட்ட நிலை தெரிய வந்தது. தோதகம்= வஞ்சனே, கபடம். . . ; மிகவும் தீதான செயல் என்று சூதாடலே இங்கனம் கருமன் இகழ்ந்து ஒதுங்கியும் சகுனி வலிந்து புரிந்த வஞ்சச் சூழ்ச்சியால் அதில் புகுந்தான். அகளுல் அரசிழந்து அருங் துயருழந்து தம்பியரோடு கானகம் போய் வெம்பி வருந்தின்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/212&oldid=1326770" இலிருந்து மீள்விக்கப்பட்டது