பக்கம்:தரும தீபிகை 5.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73. பா வ ம் 1767 அழிந்து போவர் என்னும் உண்மையை இங்ங்னம் இது உணர்த்தியுள்ளது. உணர்வுரை ஒர்ந்து சிக்திக்கத் தக்கது. இப்படி நாசப்படுத்துகின்ற நீசப் பொய்யை மனிதன் பேசலாமா? பொய் பேசிகுல் நீசன் ஆவாய், நாசமாய்ப் போ வாய்! என்று மேலோரும் நூலோரும் பரிந்து போதித்தும் அறிந்து திருக்காமல் அவமே அழிந்து போவது அஞ்ஞான இருளின் மருளாயுள்ளது. மடமையால் மடிந்து போகின்ருர். மிருகங்களை விட மனிதன் பெரியவன யிருப்பது வாய் பேசும் வாய்ப்பினலேயாம்; இக்க வாயை நல்ல வழியில் பயன் படுத்தி நலம்பல பெருமல் பொல்லாத பொய்யைப் பேசி புலை யா யிழிந்து போனல் மீண்டு எந்த வழியில் அவன் உயர்ந்து வர முடியும்? இதனை ஈண்டு நன்கு சிந்தனை செய்ய வேண்டும். வாய்பேச மாட்டாது மாடு மனிதனே வாய்பேசும் வாய்ப்போடு வந்துள்ளான்---வாய்பேசி நல்லது காணுமல் நாசமாய்ப் போகின்ருன பொல்லாத பொய்பேசப் போய். நீசமான இந்த காசப் போக்கு ஒழிந்த போதுதான் மனிதன் ஈசன் அருளே எ ப்க முடியும். மெய் ஈசனுக்கு வடிவம் ஆதலால் அதனை இழந்த அளவு அவன் நாசமே அடைகின்ருன். பொய் மனிதனைப் பாவி ஆக்கிப் படுதயர்களைச் செய்யும்; மெய் கருமவர்னுக்கி இருமையும் இன்பங்களை ஊட்டி யருளும். இந்த உண்மையை ஊன்றி உணர்ந்து நன்மையை நாடிக் கொள்பவர் எம்மையும் இனியராப் இன்பம் பெறுவர். மெய்யே சிறந்த பெருகலமாம், மெய்யே எவையும் கிலே பெறுத்தும்; மெய்யால் அழல்கால் கதிர்பிறவும் தத்தம் தொழிலின் விலகாவாம்; மெய்யே எவைக்கும் இருப்பிடமாம்; மெய்யே மெய்யே சிவமாகும்; மெய்யே பிரம பதமும் எனப் புகன்ருன் வினே தீர் காசிபனே. (காஞ்சிப் புராணம்) உவமம் தர்ந்திடு வாய்மை ஒன்றே உறின் உலகில் தவமும் தானமும் ஒருங்குறச் செய்தலின் தலையாய்ப் - o பவமகன்று நான்மறைமுடி வாகிய பரம சிவன் அரும்பதம் பெறும்படி உயர்த்திடும் தெரியின் ( கிாகக்கூவப் பாானம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/228&oldid=1326786" இலிருந்து மீள்விக்கப்பட்டது