பக்கம்:தரும தீபிகை 5.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1768 த ரும தீபிகை மெய்யின் மகிமைகளை இவை விளக்கி யுள்ளன. பொருள் நிலைகளைக் கருதிக் கானுக. பொல்லாத புலையான பொய்யைப் பேசி அல்ல.அருதே, எல்லாத் தருமங்களுக்கும் நிலையமான சத்தியத்தையே பேசி யாண்டும்.உத்தமனு உயர்ந்து கொள்ளுக. 725. உள்ளம் சிறுகுவ உள்ளற்க, உள்ளிப்பின் கள்ளம் புரிந்து கழியற்க;-எள்ளிஎன்றும் கோவ உரையற்க நோதக்க செய்தக்கால் பாவ விளைவாம் பழி. (டு) இ-ள் நீ சிறுமையுறும்படியான எண்ணங்களை உன் உள்ளத்தில் எண்ணுகே, கள்ளம் யாதும் புரியாதே; யாரையும் எள்ளி இகழ்ந்து பேசாதே; பிறர் அல்லல் உறும்படி ஏதேனும் செய் தால் பழியும் பாவமும் விளைந்து உன்னே அழிதுயர் செய்யும். மனத்தின் வழியே மனிதன் வெளி வருகின்ருன். அவனு டைய வாழ்வின் கிலைகளுக்கெல்லாம் மூலகாரணமா யிருப்பது கினைப்பே. அது நல்ல நீர்மையோடு நிலவிவரின் அந்த மனிதன் எல்லா மேன்மைகளையும் எளிதே எய்தி ஒளிமிகுந்து உயர்ந்து திகழ்கின்ருன்; அது பொல்லாதது ஆல்ை அவன் புலையாயிழிந்து கிலே குலைந்து தாழ்கின்ருன். தீய நினைவு தீயவளுக்கி விடுகிறது. புண்ணியவான் என உயர்ந்து வாழ்வதும், பாவி என இழிந்து தாழ்வதும் எண்ணத்தால் இசைக்து வருதலால் அதன் உண்மை நிலைகளை நுண்மையாக உணர்ந்து கொள்ளலாம். மனத்தைச் சரியான முறையில் நெறியே பழகிவரின் அவன் பெரிய பாக்கியவான் ஆகின்ருன். வனத்தில் போய்த் தனித் திருக்து அரிய தவங்களைச் செய்தாலும் மன நிலையை மாண் போடு பேணுன் ஆயின் அவன் மகிமையிழந்து போகின்ருன்; அதனைப் புனித நிலையில் பேணி வருபவன் எங்கிருந்தாலும் அரிய மேன்மைகளை அடைந்து பெரிய இன்பங்களை நுகர்கின் முன். இல்லின் இருந்தே ஐம்பொறியும் எல்லாம் நுகரும் காலத்தும் செல்லும்வழிமெய்ம்மொழிமனத்தைச்செல்லாகடக்கின்னழுபிறப்பும் நல்ல பயனேயாம் ஏனே நல்ல வினே தீவினை ஆக்ா அல்லல் அறுக்கும் அறக்கடவுள் அடுக்கும் அமரருல குதுமே. (விநாயக புராணம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/229&oldid=1326787" இலிருந்து மீள்விக்கப்பட்டது