பக்கம்:தரும தீபிகை 5.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73, ப ா வ ம் 1769 நல்ல நினைவுகளைப் ப்ழகி மனத்தை நன்கு பண்படுத்தி வருபவன் அரிய பல நன்மைகளை உரிமையா அடைகிருன்; கருமதேவதை யும் அவன்பால் பிரியம் மீதார்ந்து அருள்புரிந்து வரும் என்பதை இங்கே அறிந்து பொருள்நிலைகளை ஊன்றிஉணர்ந்துகொள்கிருேம். மனம் நெறி முறையே மருவிவரின் தரும நலங்கள் தழைத் துவருகின்றன; தெறிகேடாய்ச் செல்லின் பாவத் தொடர்புகள் படர்ந்துகொள்கின்றன; அது படர்ந்தால் அவ்வுயிர் வாழ்வு துயர் வாழ்வாய் இழிந்து எவ்வழியும் அவலமாய் அழிந்துபோ கிறது. பழி பாவங்களும் அழிதுயரங்களும் மனக்கேட்டால் வருதலால் அங்கக்கேடு எவ்வளவு கொடியது என்பது எளிதே தெளியலாம். நல்ல எண்ணங்களை எண்ணி வருகிற உள்ளம் செழிப்பும் வளர்ச்சியும் உரமும் உறுதியும் ஒளியும் பெற்று உயர்ந்து வருகிறது, கெட்ட நினைவுகளே மருவிவரின் சிறுமையும் தளர்ச்சியும் மருளும் மயக்கமும் மெலிவும் உடையதாய் கவி வடைந்து நைக்து எவ்வழியும் அது இழிந்து படுகிறது. இனிய அமுதம் உண்பதுபோல் புனித நினைவுகள் П Гнататт திற்கு அதிசய ஆற்றல்களை அருளி வருகின்றன; பொல்லாத எண்ணங்கள் கொடிய நஞ்சுபோல் நெஞ்சை நிலைகுலைத்து நீச மாக்கி விடுகிறது. அதனுல் காசங்களே விளைகின்றன. உள்ளம் சிறுகுவ உள்ளற்க! என்றது பொல்லாக நினைவுகள் உன் உள்ளத்தில் எழாத படி போற்றி ஒழுகுக என்பதாம். இழிவான எண்ணங்கள் தோன்றியபொழுதே உள்ளம் ஒளி இழந்துவிடுகிறது; தெய்வத் திருவருளும் விலகிப் போகிறது; போகவே பரிதாப நிலையில் அது பாழ்படுகிறது. பாழான மனம் பழி துயரமாகிறது. நல்ல எண்ணத்தால் ஆத்துமசக்தி வளர்கிறது; அதனல் அற்புக சித்திகள் விளைகின்றன; கெட்ட எண்ணத்தால் கெஞ் சம் பாழாப் நீசம் அடைகிறது; அடையவே ஈசன் அருளே இழந்து யாண்டும் அவலமாப் காசமே யு.அறுகிறது. உயிரின் இனிய துணையாயுள்ள உள்ளத்தைப் புனிதமாகப் போற்றி வருபவன் ஆற்றல் மிகுந்து பெரியவனப் உயர்கின் முன்; அவ்வாறு போற்ருதவன் ஏற்றம் இழந்து சிறியவனப் இழிகின்ான். உயர்வும் இழிவும் கினேவின்நிலையால் நிகழுகின்றன. 222

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/230&oldid=1326788" இலிருந்து மீள்விக்கப்பட்டது