பக்கம்:தரும தீபிகை 5.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73. பா வ ம் 1773 ஒழியாப் பிறவி எடுத்தேங்கி ஏங்கி உழன்ற நெஞ்சே! அழியாப் பதவிக்கு அவுடதம் கேட்டி அகாதியனே மழுமான் கரத்தனே மால்விடையானே மனத்திலுன்னி விழியால் புனல் சிந்தி விம்மி அழு நன்மை வேண்டுமென்றே. (5) (பட்டினத்தார்.) கம் நெஞ்சை நோக்கிப் பட்டினத்து அடிகள் இப்படிப் பேசி யிருக்கி ஒர். பேச்சுகள் பாடல்களாய் ஆடல்கள் புரிகின் றன. எவ்வளவு கெளிவான உண்மைகள் இவ்வளவு எளிதான மொழிகளில் வெளி வந்துள் ளன! நல்ல அனுபவ ஞானி ஆதி லால் உரைகளில் சீவ ஒளிகள் எழில் விசி மிளிர்கின்றன. இப் பாசுரங்களை மனனம் செய்து கொண்டு நாளும் யாவரும் வேத கீதமாக ஒதி வர வேண்டும். ஒதிவரின், பாவம் நீங்கும்; புண்ணி யம் ஒங்கும். ஆவி அழிய நேர்ந்தாலும் பாவி என்று காமம் படையாதே' என்றது.அரிய சிவபோகமாய் இனிது மேவிகின்றது. நித்திய அகித்திய நிலைகளை நினைந்து சிக்க சுத்தியோடு உத்தம காரியங்களைச் செப்துவரும்படி தத்துவ் போகனைகளை மேலோர்கள் வரைந்து வைத்து மறைந்து போயுள்ளனர். உயர்ந்தோர் உரிமையோடு உணர்த்தியுள்ள அறிவு கலங்களைக் கருதிவரின் அரியபல மேன்மைகள் நேரே பெருகி வரும். பாவம் கொடியது; நெடிய நரக வேதனைகளைக் கொடுப் ட தி ஆதலால் அது யாதும் உன்னே அனுகாமல் பாதுகாத்து ஒழுகுக. அந்த ஒழுக்கம் அதிசய பதவிகளை கன்கு அருளும். 727 பொல்லாச் செயல்கள் புலையாய் மனிதனை எல்லா கிலேயும் இழிவுறுத்தி-அல்லல் பலவும் தருமே படுபாவி என்று நிலைபெறுதல் சேம் நினை. (ør) இ-ள். பொல்லாத செயல்கள் மனிதனைப் புலையனுத் தாழ்த்தி எல்லா வழிகளிலும் இழிவுகளைச் .ெ ச ப் து பாண்டும் அல்லல்களை விளைத்து அடுதுயரங்களில் ஆழ்த்தும் ஆதலால் நீசமான அப் பாவப் புலைகளைத் தீண்டாமல் நீங்கி உய்யவேண்டும் என்பதாம். +

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/234&oldid=1326792" இலிருந்து மீள்விக்கப்பட்டது