பக்கம்:தரும தீபிகை 5.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1774 த ரும தீபிகை இது, பாவி ஆப்ப் பாழாகாகே என்கின்றது. தான் செப்கின்ற செயலின்படியே மனிதன் மருவி வரு கிருன். உயர்வும் தாழ்வும் இன்பமும் துன்பமும் புகழும் பழியும் கருமங்களின் விளைவுகளாய்க் கலித்து வந்துள்ளன. அந்த வினே யின் விளைவுகளையே அனுபவிக்க நேர்ந்து எவ்வழியும் உயிரினங் கள் இசைக்துகிற்கின்றன. கருமநுகர்வு இருமையும்மருவுகிறது. நல்ல கருமங்களைச் செய்தவன் எல்லா வகைகளிலும் உயர்ந்து இன்ப நலங்களை எய்துகின்ருன். பொல்லாங்குகள் புரிந்தவன் யாண்டும் இழிந்து அல்லலே அடைகிருன். நிலத்தில் விதைக்க வித்தின்படியே விளைவுகள் வெளி வருகின்றன; அது போல் உலகத்தில்செய்த வினையின்படியே பலன்கள் விரிந்து எழு கின்றன. கரும விளைவுகள் மனிதரைக் கவர்ந்து கொள்கின்றன. ஒருவனுடைய உருவ நிழல் அவனே விடாது தொடர்தல் போல் அவன் செப்த வினையின் பலனும் உயிரைத் தொடர்ந்து யாண்டும் நீங்காமல் மூண்டு அடர்ந்து கொள்கின்றது. தீயவை செய்தார் கெடுதல் கிழல்தன்னே வியாது அடியுறைங் தற்று. - (குறள், 208) பிறர்க்குத் தீங்கு செய்தவன் தப்பாமல் கெடுவான் என் பதைத் தேவர் இப்படி அற்புதமா விளக்கியிருக்கிருர். உடலின் நிழலை உவமை கூறியது ஊன்றி உணரவுரியது. நிழல் கெடிது நீண்டு நின்ருலும் முடிவில் அகன் அடியையே அடையும்; அவ் வாறே வினையின் விளைவும் து. வ்வழியும் தொடர்ந்து உயிரை ஒட்டி உருத்து வருத்தும் என்பது உய்த்துணர வந்தது. வருதிரை மணலினும் வளியினுல் திரள் சருகிலே போலவும் சாயை போலவும் மருவிய வினேவசம் வருவதல்லது இங்கு ஒருவர்கண் உறவொரு நாளும் இல்லையே. == -- (மேருமந்தர புராணம்) செய்த வினையின் நிலைமைக்குத் தக்கபடியே போகங்கள் பொருந்தி வருகின்றன என இது இங்கனம் உணர்த்தியுள்ளது. தனக்கு இன்பத்தைக் கருகிற நல்ல கருமங்களைச் செய்யா மல் அல்லல்களை விளைக்கின்ற பொல்லாத வினைகளை ஒருவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/235&oldid=1326793" இலிருந்து மீள்விக்கப்பட்டது