பக்கம்:தரும தீபிகை 5.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1782 த ரும தீபிகை விளைத்துவரும் ஆதலால் தீவினை கொடிய தியினும் நெடிய கூற் றினும் கடிய விடத்தினும் கொடிது என முடிவாய் கின்றது. பாய பல் பகைக்கும் தப்பிப் பாரிடை உய்யலாகும்; மேயவக் கதிசென்ருலும் விளிதரா துடங்கு சென்றே ஆயநன் றனைத்தும் கொன்று அங்கு அருந்துயர் பலவும் கல்கும்; தியவல் வினேயின் யாதும் செய்யற்க ஏம கண்டா! (விநாயக புராணம்) செய்த பாவம் ஆனது உயிரை விடாது சென்று துயர்கள் பல செய்யும்; அதனை யாதும் செய்யாதே எனத் தன் மகனுக்கு ஒர் அரசன் இவ்வாறு உரிமையோடு அறிவுபோதித்திருக்கிருன். கொன்றுயிர் நடுங்கச் சென்று கொலைத்தொழில் கருவி ஏந்தி கின்றெரி நுடங்கு கண்ணுல் பாவமே கினேந்து செத்தார் சென்றெரி நரகில் விழ்வர் செவ்வனே துன்பம் அஞ்சி நன்றியில் கொலேயின் நீங்கி நற்றவம் புரிமின் என்ருன். (சூளாமணி) பிற உயிர்களை நடுங்கும் படி செய்தால் நீ நடுங்கி வருக்தி நரக துன்பங்களை அடைவாய் ஆகலால் பாவத்தை யாண்டும் யாதும் செய்யாதே என இது உணர்த்தியுளது. ஒவ்வொரு மனி தனும் செவ்வையாப் உணர்ந்து வெவ்வினை நீங்கி உய்யும்படி உறுதி நலங்களை மேலோர் உரிமையோடு குறித்திருப்பது கூர்ந்து சிந்திக்கவுரியது. மனித சமுதாயம் மகிமையுற மதிகள் வந்தன. கருமவான், புண்ணியவான் என்று கன்னே உலகம் உவந்து பேசும்படி ஒருவன் நடந்து வந்தால் அவன் இந்த வையகத்தி லேயே வானகத்தின் பேரின்பத்தை அடைந்தவ னுகின்ருன். நெஞ்சம் புனிதமாய் நெறி முறையோடு ஒழுகி வருபவன் விழுமிய மேலோனப் விளங்கி வருகிருன். கரும தேவதை அவ னிடம் மருவி மிளிர்கிறது; அரிய பல மேன்மைகள் அவனுக்கு உரிமையா யமைகின்றன. தெய்வத் திருவருள் சுரந்து வருதலால் எவ்வழியும் அவன் உயர்ந்து விளங்கி ஒளி விசி நிற்கின்ருன். "கல்வினையுடைய நீரார் நஞ்சு உணின் அமுதம் ஆகும்; இல்லையேல் அமுதும் நஞ்சாம்; இன்னதால் வினேயின் ஆக்கம்.' (சிந்தாமணி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/243&oldid=1326801" இலிருந்து மீள்விக்கப்பட்டது