பக்கம்:தரும தீபிகை 5.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73. பா வ ம் L783 நல்வினையாளர்க்கு நஞ்சும் அமுகமாம்; தீவினையாளர்க்கு அமுதமும் நஞ்சாம் என இதில் குறித்திருப்பது கூர்ந்து சிந்திக் கத்தக்கது. பாவம் மிகவும் தீயது; எவ்வழியும் வெவ்விய துயரங் களையே விளைப்பது; அதனேடு பாதும் பழகலாகாது என்னும் உறுதி ിജങ്ങഥ இங்கே நன்கு உணர்ந்து கொள்கின்ருேம். இழிந்த பலபிறவிகளையும் கப்பி உயர்ந்த மனிதப் பிறவிக்கு வந்திருக்கிருப்; இந்த அரிய பிறவியில் உரிய கல்வினைகளைச் செய்து புண்ணியவானப் உயர்ந்து புக்கேளுலகத்தை அடைய வேண்டும்; அங்கனம் அடையாமல் தீவினைகளைச் செய்து பாவி யாயிழிந்து நரக துன்பங்களில் விழுவது எவ்வளவு அழிவு எத் துணை இழிவு! உய்த்து உணர்ந்து உண்மை தெளிய வேண்டும். 'வித்துப் பொதிவார் விரைவிட்டு காற்றுவார் அற்றதம் வாணுள் அறிகிலாப் பாவிகள் உற்ற வினேத்துயர் ஒன்றும் அறிகிலார் முற்ருெளி தியின் முனிகின்ற வாறே." (திருமந்திரம்) ஆயுள் கழிந்து நாளும் ஒழிந்து போகிறது; அக்க அழிவு நிலையை உணர்ந்து தம் உயிர்க்கு உறுதி நலன விரைந்துகொள் ளாமல் வினே மாந்தர் மாப்ந்துபடுகின்ருர், பாவிகளாய் இழிந் துபோகாமல் உயர்ந்து உய்தி பெறவேண்டும் என்று திருமூலர் இவ்வாறு உருகி வேண்டியிருக்கிரு.ர். நல்ல அறிவுடயனுய் உயர்ந்த பிறப்பில் வந்துள்ள மனிதன் தன் உயிர்க்கு அல்லல் நேரா வகையில் ஆய்ந்து தேர்ந்து நெறி நியமங்களோடு ஒழுகி வரவேண்டும்; பண்போடு வாழ்ந்து வரு கிற அங்க வாழ்வு என்றும் இன்ப நிலையமாய் ஏய்ந்து வரும். அவ்வாறின்றிப் பொறி வெறி மண்டி நெறிகேடாப் நடக்கால் இறுதியில் அவலக் துயரங்களையே அனுபவிக்க நேரும். ஆதன் பெருங்களி யாளன் அவனுக்குத் தோழன்மார் ஐவரும் விண்கிளேஞர்-தோழர் வெறுப்பனவும் உண்டெழுந்து போனக்கால் ஆதன் இறுக்குமாம் உண்ட கடன். (அறநெறி, 129) ஆன்ம நலனே மறந்து கே.க போகங்களிலேயே களித்தி ருந்த மனிதன் முடிவில் அடையும் துயர நிலைகளை இது உணர்த்தி யுள்ளது. உரைக் குறிப்புகள் கூர்ந்து ஒர்ந்து உணரத்தக்கன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/244&oldid=1326802" இலிருந்து மீள்விக்கப்பட்டது