பக்கம்:தரும தீபிகை 5.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1784, த ரும தீ பி. கை ஒர் ஊரில் ஒரு செல்வன் இருந்தான். பெருங்குடியன்; அவனுக்கு நண்பராய் ஐந்துபேர் அமைந்திருந்தனர்; தின்பதும் குடிப்பதமாகிய களியாட்டங்களிலேயே அவர் மூண்டு நின்ற னர்; உறவுரிமையாளர்போல் ஒட்டியிருந்து பல வழிகளிலும் உண்டு களித்து வந்தனர்; அகனல் அவனது செல்வம் எல்லாம் தொலைந்தது; கடனும் மிகுந்தது; அந்தக் கடனைத் தீர்க்க முடி யாமல் சிறையில் போயிருந்து துயரங்களை அடைந்து செத்தான்; மறுபடியும் இழி பிறப்பில் பிறந்து அழிதுயரங்களையே நுகர்ந்து அலமந்து கொக்தான். அறிவுகெட்ட அந்த மடையன் கெட்ட பழக்கங்களால்கனக்குக் துன்பக்தைத் கானேவிளைத்துக்கொண் டதுபோல் மனிதனும் மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்புல இச்சைகளில் அழுந்தி மனம்போனபடியெல்லாம்போப் பாவங்களைச் செய்துகொண்டு அவற்றின் பலன்களான துன் பங்களைத் தொடர்ந்து நுகர்ந்து இழிந்து உழலுகின்ருன். இந்த உண்மையை உருவக அணியில் இக்கவி சுவையாக விளக்கி யிருக்கிறது. காட்டிய கருத்துகள் கருதிச் சிந்திக்க வந்தன. ஆகன் = அறிவிலி, குருடன். ஞானக்கண் இல்லாமல் ஈன LT]/T யழிந்துபட்ட இழிநிலை தெரிய ஆதன் என்ருர். ஐவர் வீணர் என்றது ஐம்பொறிகளே. நெறிகேடான வழிகளிலேயே வெறி கொண்டு சென்று வினைகளை அவை விளைத்து விடுகின்றன; அந்த வினைத்துயரங்களை சீவன் தனியே அனுபவிக்க நேர்கின்ருன். பிறர் மனம் கொந்து வருந்தும்படியான காரியங்களைச் செய்வது பாவமாய் வருகிறது; அதன் பலன்கள் . பற்றித் தொடர்ந்து செய்தவனேச் சித்திரவதை செய்கின்றன. மாடு பன்றி முதலிய இழி பிறவிகளில் உழக்தம், கொடிய நரக துன் பங்களை நுகர்ந்தும் பாவிகள் நெடிது வருந்தி நீசமாயுழலுகின்ற னர். ஒருபிறவியில் செய்தது வருபிறவியிலும் வந்து வருத்துகிறது. நட்பிடைக் குய்யம் வைத்தான், பிறர்மனே நலத்தைச்சேர்ந்தான் கட்டழல் காமத்தியிற் கன்னியைக் கலக்கி னுைம், அட்டுயிர் உடலம் தின்ருன், அமைச்சய்ை அரசு கொன்ருன், குட்டநோய் நரகம் தம்முள் குளிப்பவர் இவர்கள் கண்டாய். (சீவக சிந்தாமணி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/245&oldid=1326803" இலிருந்து மீள்விக்கப்பட்டது