பக்கம்:தரும தீபிகை 5.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75. புண் ணியம் 1849 விண்ணுலக வாசிகளுக்கு எண்ணிப் இன்ப நலன்களை இனிது கருகிற இந்தத் திவ்விய கருக்களினும் மண்ணுலக வாசி களுக்குப் புண்ணியம் எண்ணரிய பெருமைகளையும் இன்ப சுகங் களையும் எவ்வழியும் செவ்வையாய் நன்கு அருளி வருகிறது. "கங்கைகதி பாவம் சசிதாபம் கற்பகம்தான் மங்க லுறும் வறுமை மாற்றுமே---துங்கமிகும் இக்குணம்ஒர் மூன்றும் பெரியோர் இடம்சேரில் அக்கணமே போம்என் றறி.” (நீதிசாரம்) கங்கைநதி பாவத்தை நீக்கும்; சந்திரன் தாபத்தை போக்கு வான்; கற்பகம் வறுமையை ஒழிக்கும்; புண்ணிய சீலராகிய பெரியோரைச் சேரின் பாவம் காபம் வறுமை முதலிய சிறுமை கள் யாவும் ஒருங்கே ஒழிந்து பெருமைகள் பெருகி வரும் என்னும் இது இங்கே உரிமையோடு ஊன்றி உணர வுரியது. புண்ணியம் உடையவர் அரிய பல மகிமைகளை அடைந்து விளங்குகின்ருர், அஃது இல்லாதவர் அவல நிலைகளில் இழிந்து உழல்கின்ருர். அறக்கை இழந்தபோதே அவகேடுகள் விளைந்தன. கான் கருதியபடி யெல்லாம் எவ்வழியும் செவ்வையாக எவனும் எதையும் அடைய முடியாது; அவன் முன்பு செய் துள்ள அல்லது பின்பு செய்து வருகிற கல்வினையின் அளவே நல்ல பலன்கள் அவன்பால் வந்து சேர்கின்றன. ஈட்டி வந்த புண்ணிய கருமங்களே இன்பத்தைக் காட்டியருளுகின்றன. மனம் நல்லதாய், வாக்கு இனிய காப், செயல் இதமாய் ஒருவனுக்கு அமைந்துவரின் அவனிடம் புண்ணியம் பொங்கி வருகிறது. இந்த மூன்று கரணங்களையும் நல்ல வழிகளில் பழக்கி வருபவர் மேலோராப் உயர்ந்து எல்லா மேன்மைகளையும் எளிதே எய்துகின்றனர். மும்மையும் கலமாயின் எம்மையும் இனிதாம். புண்ணிய நீர்மை தோய்க்க நல்லோருண்ட்ய உள்ளமும் சொல்லும் செயலும் எவ்வாறு இருக்கும்? என்பதைச் சுருக்க மாகத் தெரிந்துகொள்ள விரும்பின் அயலே வருவதை ஊன்றி உணர்ந்துபொருள் நிலைகளே ஒர்ந்து தெளிந்துகொள்ளவேண்டும். உள்ளம் "உள்ளச் செய்தி தெள்ளிதில் கிளப்பின் 232

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/310&oldid=1326873" இலிருந்து மீள்விக்கப்பட்டது