பக்கம்:தரும தீபிகை 5.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75. புண் ணியம் 1851 35 கார்கோள் அன்ன கயம்பல கிளேத்தல்; கூவல் தொட்டல், ஆதுல்ர் சாலே: அறங்கரை காவின் ஆன்ருேர் பள்ளி, கடவுட் கண்ணிய தடவுகிலேக் கோட்டம், இனையவை முதலா நினைவரும் திறத்த 40 புரத்தல் மாதோ அறத்துறை, மறத்துறை இவற்று வழிப்படாஅது எதிர்வன கெழீஇ உஞற்றென மொழிப உணர்ந்திசி னேரே...' (ஞானமிர்தம்) மனம் மொழி மெய்களால் விளையும் புண்ணிய நிலைகளை இது வரைந்து குறித்துள்ளது. உரைக் குறிப்புகள் ஒர்ந்து சிக்திக்கத் தக்கன. இனிய கருமங்கள் புனித தருமங்களாய் வருகின்றன. எல்லா மேன்மைகளுக்கும் மனமே மூல காரணமாயுள் ளது; அது நல்லதாக அமையின் யாவும் நலமாய் மேவி வருகின் றன. மனநல முடையவனிடம் எல்லா நன்மைகளும் இனமாய் வந்து சேருதலால் உயர்ந்த கதியை அவன் விரைந்து அடைந்து கொள்ளுகிருன். புனித மனமே புண்ணியம் ஆகிறது. ஒருவன் உள்ளம் தூய்மை ஆய பொழுது தரும தேவதை அவன்பால் உரிமையாய் ஒளிபுரிக் கருளுகின்றது. அருளவே அதிசய நிலையில் யாண்டும் அவன் துதிகொண்டு திகழ்கின்ருன். அவன் எதிரே எவரும் தலை வணங்கி நிற்க நேர்கின்ருர். பரசுராமன் பெரிய தவம் உடையவன்; அரிய ப்ோவீரன்; அரசர் மரபிடம் கறுவு கொண்டிருந்தான் ஆதலால் அந்த வரிசை யில் வந்த இராமனேடு போராட நேர்ந்தான். சினந்து முனைந்து றிே மூண்ட அவன் இராமன் எதிரே விரைந்து தோல்வி அடைக் தான். தனது தோல்வியை உணர்ந்த அவன் எதிரியை வியக் தான். இராமனிடம் தருமம் நிறைந்துள்ளமையால் தன்னை எளிதே வென்று கின்ருன் என்று வியந்து புகழ்ந்தான். 'தரும மூர்த்தியே! உன்னை யாரும் வெல்ல முடியாது; நீயே எவரையும வெல்லவல்லவன்; கருதியளவையும் உனக்கு இனிது கைகூடும்” என்று உரிமையோடு தொழுது உவந்து புகழ்ந்து போனன். "எண்ணிய பொருள்எலாம் இனிது முற்றுக மண்ணிய மணிகிற வண்ண வண்துழாய்க் கண்ணிய யாவர்க்கும் களேகண் ஆகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/312&oldid=1326876" இலிருந்து மீள்விக்கப்பட்டது