பக்கம்:தரும தீபிகை 5.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1852 த ரும தீபிகை புண்ணிய! விடைஎனத் தொழுது போயினன்.” (இராமா, பரசுராம, 40) இராமனுடைய அதிசய நிலையை உணர்ந்ததும் பரசுராமன் இவ் வா. துதி செய்து தொழுது போயிருக்கிருன். புண்ணிய என்று கண்ணியமா விளித்தது கருமமே இவனுக்கு அதிசய வெற்றி களே அருளியுள்ளது என்பது தெளிய வந்தது. தருமத்தை இவ் விரன் போற்றியிருக்கும் நிலை இவனது சீவிய காவியத்தில் ஒவிய உருவங்களாய் ஒளி புரிந்து திகழ் கின்றது. உரைகள் எல்லாம் கருமங்களையே உணர்த்தியுள்ளன. "அறத்தில்ை அன்றி அமரர்க்கும் அருஞ்சமம் கடத்தல் மறத்தில்ை அரிது என்பது மனத்திடை வலித்தி' (இராமா, முதல்போர், 252) படைகள் யாவும் இழந்து போரில் தன் எதிரே தோல்வியடைந்து நின்ற இராவணனை நோக்கி இராமன் இப்படிக் கூறியிருக்கி ருன். கருமமே வெற்றி கரும்; அதனை இழந்தவன் உயர்க்க தேவனுயினும் இழிந்தே படுவான் என்பதை இனிமேலாவது நீ தெளிந்து கொள்!” என்று அக்க கிருதர் பதிக்கு இந்த நீதிபதி போதித்திருக்கும் நீர்மை ஒதி ஓதி உணர்ந்து தெளிய வுரியது. எல்லாப் பெருமைகளையும் இனிது நல்கி எவ்வழியும் இன் பமே கருகிற கருமத்தை இயன்ற அளவு கழுவி வருவதே உயர்ந்த மனிதனுப்ப் பிறந்து வக்கதின் சிறந்த பயனும். பிறந்துநாம் பெருகி கின்ரும் பேணிய உடம்பு நீங்கி இறந்து போய்ச் சேர்ந்து கிற்கும் எல்லேயும் தெரியவில்லை; மறந்துமுங் திரிவாழ் நாளே மயங்கியே களிக்கின் றேமால் அறந்துணை அன்றி வேறே அருந்துணை யாதும் இன்றே. குணத்தினே மறந்து பொல்லாக் கொடுமையும் குதும் சூழ்ந்து பணத்தினேப் பரிந்து பற்றிப் பழிபவம் வளர நாளும் பிணத்தினே வளர்த்து கின்ருர் பேயர்கள் உயிரைப் பேணி மணத்தினை அடையா தந்தோ மயங்கி வாளா மடிந்தார். (2) (விர பாண்டியம்) அறத்தை ஒருவி அவலங்களைத் கழுவி அவமே இழிந்து அழிந்து போகாதே; புண்ணியத்தை மருவிப் புனிகளு உயர்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/313&oldid=1326877" இலிருந்து மீள்விக்கப்பட்டது