பக்கம்:தரும தீபிகை 5.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75. புண் ணியம் 1853 746. அறமே பொருளின்பம் ஆக்கி யருளும் மறமே துயர்செய்து மாய்க்கும்-திறமாக ஒர்ந்து புரிந்தார் உயர்ந்தார்; அயர்ந்தார்பின் பேர்ந்து விழுந்தார் பிறழ்ந்து. (சு) இ-ள் பொருளையும் இன்ப நலங்களையும் கருமமே அருளும்: பாவம் அல்லல்களை விளைத்து அழிதயரங்களையே கொடுக்கும்; இங்க உண்மை நிலைகளை உறுதியாகத் தெளிந்து நன்மை செய் பவர் பேரின்ப நிலையில் உயர்ந்தார்; அவ்வாறு செய்யாமல் அயர்ந்து புன்மை புரிபவர் இழிந்து அழிக்கார் என்பதாம். அரிய பிறவியில் வந்த மனிதன் உரிமையாகப் பெற உரில் பொருள்கள் நான்கு; அவை அறம் பொருள் இன்பம் வீடு என வரம்பு அமைந்துள்ளன. நன்மை தீமைகளை நாடி அறிந்து உண்மை கண்டு உய்தி பெறுக்கன்மை மனிதனிடம் தனியுரிமை யாய் அமைந்திருக்கிறது. சிறந்த நிலையில் தோன்றியுள்ள இவன் பிறக்க பயனே விரைந்து பெற வேண்டும். அவ்வாறு பெறவில்லை யானுல் எவ்வழியும் இழிந்து படுவான்; வெவ்விய துயரங்கள் விளைந்து விடும். விளைவுகள் தெரியாமல் விளிவது இழிபழியாம். நீர்மேல் குமிழிபோல் கிலத்தில் ஒல்லையில் அழிந்து மறை யும் உடம்பை எடுத்து வந்துள்ள மனிதன் தனது நிலைமையை உணர்ந்து உயிர்க்கு உறுதிகலனை உரிமையாக அடைந்து கொள் ளவில்லையானுல் அவன் சிறுமையாய்ச் சீரழியவே நேர்கின்ருன்; கோவே பிறவிப் பேற்றை இழந்த பேதை எனக் கருமதேவதை அவனே மருமமா இகழ்ந்து எள்ளித் தள்ளி விடுகின்றது. மாய்தலும் பிறத்தலும் வளர்ந்து விங்கலும் தேய்தலும் உடைமையைத் திங்கள் செப்புமால் வாய்புகப் பெய்யினும் வழுக்கில் நல்லறம் காய்வது கலதிமைப் பால தாகுமே. (சீவக சிந்தாமணி) மனிதர்காள்! விேர் விரைந்து இறந்து படுவீர்! சாவு நேரு முன்னரே நல்ல தருமத்தை மருவிக் கொள்ளுங்கள்; இல்லையேல் அல்லலேயாம் என வானத்தில் தோன்றி நின்று சந்திரன் ஞானத்தைப் போதிக்கின்ருன், தேய்தல் மாய்தல் ஆகிய தனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/314&oldid=1326878" இலிருந்து மீள்விக்கப்பட்டது