பக்கம்:தரும தீபிகை 5.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1854 த ரும தீபிகை கிலைமையை நேரே காட்டி அவன் போதித்தும் மாக்தர் புண் ணிய நிலையைப் பொருந்தாமல் இழிந்து போவது கொடிய தீவினையின் கூறே என இது இரங்கியிருக்கின்றது. பொருளின் நயங்களும்போதனையும் தெருளோடு உணர்ந்து சிந்திக்கவுரியன. தான் இன்பமாய் இனிது வாழவே எந்த மனிதனும் யாண் டும் நீண்டு சிந்தனை செய்து வருகிருன்; தான் கருதியபடி அடையாமல் பெரும்பாலும் அவன் மறுகி புழல்கின்ருன்; அதற்குக் காரணம் அவனிடத்திலேயே பூரணமாய் மருவி யிருக்கிறது. உரிய மூலத்தை உணராமல் ஊனமாய் அலைகிருன். துன்பங்கள் பாவத்தின் விளைவுகளாய் வருகின்றன. இன்பங்கள் புண்ணியத்தின் பயன்களாப் மருவுகின்றன. மனிதன் ஒருவன் துயரங்களில் அழுந்தி உழலுகின்ருன் என்ருல் தான் செய்த தீவினைப் பயன்களை அவன் அனுபவிக் கின்ருன் என்பது அறிய வருகிறது. இன்ப நலன்களை நுகர்கின் முன் என்ருல் நல்வினையின் விளைவுகளை அவன் நன்கு துய்க்கின் ருன் என்பதை உய்த்து உணர்ந்து கொள்கின்ருேம். வித்திய படியே விளைவுகள் வெளி வருகின்றன. காரண காரிய உரிமைகள் எவ்வழியும் பூரணமாய்ப் பொருந்தி வருவது திருந்திய நியமமாய்ச் சிறந்து திகழ்கிறது. அல்லலான வினைகளைச் செய்தவன் அவலத் துயர்களையே அடைகின்ருன்; நல்லது புரிங் தவன் எவ்வழியும் இனிய நலனேயே பெறுகின்ருன். இனிய நீர்மைகளால் தருமம் விளைகிறது; அதனல் இருமை யும் பெருமையாப் இன்ப நலன்கள் அமைகின்றன. புண்ணிய மே யாண்டும் போகங்களை ஊட்டியருளுகலால் அது அரிய பெரிய இனிய ஒரு சீவ அமுதமாய் மேவியுள்ளது. "முற்பிறப்பில் தாம்செய்த புண்ணியத்தின் நல்லதோர் இற்பிறந்து இன்புரு கின்றவர்-இப்பிறப்பே இன்னும் கருதுமேல் ஏதம்கடிந்து அறத்தை முன்னி முயன்ருெழுகற் பாற்று. (1) அம்மைத்தாம் செய்த அறத்தின் வருபயனே இம்மைத்துய்த்து இன்புரு கின்றவர்-உம்மைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/315&oldid=1326879" இலிருந்து மீள்விக்கப்பட்டது