பக்கம்:தரும தீபிகை 5.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1856 த ரும தீ பி. கை இதம் செய்து வருக; அவ்வாறு வரின் நீ புண்ணியவான் ஆவாய்; ஆகவே விரிந்து பரந்த உலகம் எல்லாம் உவந்து தொழுது புகழ்ந்து வர நீ உயர்ந்து விளங்குவாப் என்பதாம். இது மேலோன் ஆகும் மூலம் கூறுகின்றது. செல்வத்தில் சிறந்து பதவியில் உயர்ந்து நல்ல சுக போகங் களை நுகர்ந்து யாவரும் புகழ்ந்து போற்ற இனிது வாழ வேண் டும் என்றே எல்லா மனிதரும் எண்ணுகின்றனர். அந்த எண் ணம் நன்கு நிறைவேற எந்த வண்ணம் கடந்து கொள்ள வேண்டும் என்பதை எவனும் சிங்தை செய்வதில்லை. உரிய கடமைகளைச் செய்யாமல் அரிய பெருமைகளே அடைய அவா வுவது பெரிய மடமைகளாய்ப் பெருகியுள்ளது. வரவு நிலை தெரி யாமல் கரவு வழிகளில் மனிதசமுதாயம் மறுகி யுழலுகின்றது. செய்த வினை அளவே பலன் எய்த வருகிறது. நிலைமைக ளுக்குத் தக்கபடியே கருமங்கள் பெருமை பெற்றுப் பெரும் பலன்களைக் கருகின்றன. கரும விளைவுகள் மருமங்களாயுள்ளன. தான் உழைத்து ஈட்டிய பொருளைத் தன் அ ள வில் அடைத்து வைப்பவனும், தானகவே உண்டு களிப்பவனும் உயர்ந்த நிலைகளை அடைந்து கொள்ள முடியா. பிற உயிர்கள் இன்புற உதவி வருபவனே தன் உயிர்க்கு இன்பத்தைச் செய்த னப் உயர்ந்து வருகிருன். இனிய இகம் அரிய அறம் ஆகிறது. தன் கருமத்தால் கருமத்தை விளேத்து வருபவன் இருமை யும் பெருமையாப் இன்புறுகிருன். அவ்வாறு செய்யாதவன் சிறுமையே அடைகின்ருன் புண்ணியத்தைப் பேணி வரும் அளவே மனிதன் கண்ணியம் பெறுகின்ருன் ஆகலால் மண்ணி யல் மாந்தர்க்கு விண்ணியல் அமிர்தமாய் அது விளங்கி நிற்கிறது. அறம் படியாக வாழ்வு மறம் படிந்து எவ்வழியும் இழிந்து படுகிறது.கருமம்மருவியகேபெருமையாப்ப்பேரின்பமுறுகிறது. நொறுங்கு பெய்து ஆக்கிய கூழ் ஆர உண்டு பிறங்கிரு கோட்டொடு பன்றியும் வாழும்; அறம்செய்து வாழ்வதே வாழ்க்கை; மற்றெல்லாம் வெறும்பேழை தாழ்க்கொளிஇ அற்று. (அறநெறிச்சாரம், 78)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/317&oldid=1326881" இலிருந்து மீள்விக்கப்பட்டது