பக்கம்:தரும தீபிகை 5.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75. புண் ணியம் 1857 சுயநலமே கருதித் தன் வயிற்றை மாத்திரம் வளர்த்து வருபவன் இளி வாழ்வுடையனப் இழிந்து படுகிருன்; அவன் ஈனமான ஒரு கான விலங்கே என இது மானமா வரைந்து காட்டியுளது. பன்றியும் நாயும் கூட வயிருர உண்டு வாழ்கிறது; அது வாழ்வா? மனிதன் அந்த கிலேயில் வாழ லாமா? மதிநலமுடைய மனிதன் விதிமுறை தெரிந்து தன் உயிர்க்கு இனிய உறுதி கலனே உரிமையோடு மருவிக்கொள்ள வேண்டும்; அங்கனம் கொள் ளாமல் உடம்பைக் கொழுக்க வளர்த்துக் களித்துத் திரியின் அவன் இழிந்த ஒரு மிருகமே யாவன்; அழிக் துபடும் அவலமே யுடையவன் என்பது இங்கே தெளிந்து கொள்ள வந்தது. அறம் புரியும் வாழ்வே வாழ்வு; அஃது இல்லாத வாழ்வு பாழே. வெறும் பெட்டியை ஒருவன் பூட்டி வைத்தான்; பின்பு திறந்து பார்த்தான்; உள்ளே ஒன்றும் இல்லை; எங்கி வருக்தி ன்ை; இழிந்து ஒழிக்கான்; கருமம் புரியாதவனும் அவ்வாறே யாதும் இல்லாதவனப் அல்லலுழந்து அலமந்து போகின்ருன். தன் வாழ்க்கையில் புண்ணியம் புரிந்தவன் பொன் கட்டி களே கிறைத்து வைத்தவனகின்ருன்; ஆகவே எண்ணிய இன்ப நலன்களை யெல்லாம் எங்கும் பெற்றுப் பொங்கிய புகழோடு பொலிந்து விளங்குகிருன். அறம் அமர வாழ்வை அருளுகிறது. தண்ணளி செய் என்றது புண்ணிய விளைவை எண்ணி வந்தது. உள்ளம் உருகியருள உயர்பேரின்பம் பெருகி வருகிறது. புண்ணியம் பொருளால் மாத்திரம் அன்று; அருளாலேயே பெரிதும் அது பெருகி விளைகிறது. உயிர்களுக்கு இரங்கி உதவு வது அருளியல்பு ஆதலால் அது பெரிய புண்ணிய கிலேயமாய்த் தலைமை எய்தியுள்ளது. அதனையுடையவர் அரிய பல மேன்மை களே விரைந்து அடைந்து பெரிய இன்பங்களைப் பெறுகின்ருர். விசாலன் என்பவன் இரக்கம் மிக வுடையவன்; வயனங் கோடு என்னும் ஊரில் வேதியர் சிலர் வேள்வி செய்ய சேர்க் தார்; அதில் பலியிடும் பொருட்டு ஒரு பசுவைப் பிணித்து வைக் திருந்தார்; அதனை இவன் கண்டான்; அதன் நிலைமையை நோக்கி நெஞ்சம் இரங்கினன். "ஐயோ! பசுவைப் படுகொலை செய்யப் போகிருர்களே!’ என்று பரிந்து வருக்திய இவன் 233

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/318&oldid=1326882" இலிருந்து மீள்விக்கப்பட்டது