பக்கம்:தரும தீபிகை 5.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1858 த ரும தீ பி ைக இரவு வரவும் யாரும் அறியாமல் புகுந்து அதனே அவிழ்த்து வெளியேற்றி அயலே இதமாக் கொண்டு போப் விட்டான். "அப்பதி தன்னுளோர் அங்தனன் மனே வயின் புக்கோன் ஆங்குப் புலேசூழ் வேள்வியில் குரூஉத்தொடை மாலே கோட்டிடைச் சுற்றி வெரூஉப்பகை அஞ்சி வெய்துயிர்த்துப் புலம்பிக் கொலோகவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி வலையிடைப் பட்ட மானே போன்ருங்கு அஞ்சிகின்று அழைக்கும் ஆதுயர் கண்டு நெஞ்சு நடுக்குற்று நெடுங்கனிர் உகுத்துக் கள்ள வினேயில் கடுந்துயர் பாழ்பட நள்ளிருட் கொண்டு நடக்குவன் என்னும் உள்ளம்கரந்து ஆங்கு ஒருபுடை ஒதுங்கி அல்லிடை ஆக்கொண்டு அப்பதி அகன்ருேன்.” (மணிமேகலை, 13) அருள்புரிந்து இவன் பசுவைக் காத்துள்ள கிலேயை இப் பாசுரம் உணர்த்தியுள்ளது. ஆவின் நிலையைக் கண்டபோது இவன் குலை துடித்து மறுகியிருக்கிருன். நெஞ்சு நடுக்குற்று நெடுங்கண் நீர் உகுத்து என்ற கல்ை இவனது இரக்கமும் உருக்கமும் உணர லாகும். சீவ தயை ஆவி கிலையாய் மேவி மிளிர்கின்றது. கொலே நிலையிலிருந்து நீக்கிப் பசுவை இவ்வாறு இவன் பாதுகாத்துக் கொண்டுபோய்க் காட்டில் ஒரிடத்தில் அகற்குப் புல்லை ஊட்டி கின்ருன். ஆவைக் காணுமையால் வேதியர் வேதனையோடு தேடித் திரிக்கார்; இவனேக் கண்டார்; எள்ளி வைது தள்ளி அடித்தார்; அப்பொழுது அந்தப் பசு சீறிப் பாய்க்து ஒரு பார்ப்பான வயிற்றைக் கிழித்துக் குடலைச் சரித்து விட்டு அடலோடு ஒடிப்போயது. கையில் அகப்பட்ட இவனே எல்லாரும் கையப் புடைத்தார். அடிகளைத் தாங்கிக் கொண்டு அம் மறையவர்களை நோக்கி இக மொழிகளை இனிது கூறினன். அன்அறு.இவன் கூறிய அறிவுரைகள் சீரிய நீர்மைகள் தோய்ந்தன. 'நோவன செய்யன் மின்! நெர்டிவ ைகேண்மின் ! விடுகில மருங்கில் படுபுல் ஆர்ந்து கெடுகில மருங்கின் மக்கட் கெல்லாம் பிறந்தாாள் தொட்டுச் சிறந்ததன் திம்பால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/319&oldid=1326883" இலிருந்து மீள்விக்கப்பட்டது