பக்கம்:தரும தீபிகை 5.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75. புண் ணியம் 1859 அறந்தரு நெஞ்சோடு அருள்சுரந்து ஊட்டும் இதனெடு வந்த செற்றம் என்னே? முதுமறை அந்தணிர் முன்னியது உரைமோ' (விசாலன்) "தாகைக் காட்டில் முளைத்த புல்லே உண்டு, ஏரி குளங்க ளில் நீரைக் குடித்து, நாட்டிலுள்ள மக்களுக்கு யாண்டும் தரும சிந்தனையோடு பாலை ஊட்டியருளுகிற பசுவினிடம் நீங் கள் கொடுமை காட்டுகிறீர்கள், அதனேக் கொல்லவும் துணிகி மீர்கள்; யாகம் என்று வெளியே இனிய பேரை வைத்துக் கொண்டு உள்ளே கொடிய கொலைகளைச் செய்கிறீர்கள்; இது எவ்வளவு புலைத்தீமை! உங்களுக்கு அந்தனர் என்ற பெயர் யார் தந்தது? எதனுல் வந்தது? அதனைக் கொஞ்சம் சிந்தனை செய்து பாருங்கள்; விவேக சூனியமாய்த் தீவினைகளைச் செய்யாதீர்கள்; சேமான அவை உங்களுக்கு காசமேயாம்; தெளிந்து ஒளிந்து போங்கள்’’ என்று இவன் மொழிந்திருப்பது உணர்ந்து சிங் திக்கவுரியது. அருள் சுரக்க உரைகள் பொருள் நிறைந்துள்ளன. குழந்தையா யிருக்க பொழுது ஒரு பசு பால் ஊட்டி இவனே வளர்க்கமையாலும், பசுவை அன்புரிமையோடு பாது காத்கமையாலும் இவன் ஆபுத்திரன் என நேர்ந்தான். மிகுந்த சீவகாருணிய முடையவளுப் பாண்டும் உயிர்களே இவன் இனிது பேணி வங்கான். குருடர், முடவர், வறியவர் முதலிய எவரைக் கண்டாலும் உள்ளம் உருகி இவன் உதவி புரிந்தான். 'காணுர் கேளார் கால்முடப் பட்டோர் பேணுகர் இல்லோர் பிணிநடுக் குற்ருேர் யாவரும் வருகஎன்று இசைத்துடன் ஊட்டி உண்டொழி மிச்சில் உண்டு ஒடுதலே மடுத்துக் கண்படை கொள்ளும் காவலன்." (மணிமேகலே) என இவனது உபகார நிலையைக் குறித்துச் சாத்தனர் என்னும் சங்கப் புலவர் இங்கனம் உரைத்திருக்கிருர். தண்ணளியோடு உயிர்களை இவ்வண்ணம் பேணி வந்தமையால் பின்பு இவன் நாக நாட்டு மன்னனுப்ப் பிறந்தான். சிறந்த புண்ணியத்தால் பிறந்த இவன் அந்த வாசனையோடே தரும நீர்மைகள் கிறைக் திருந்தான் ஆதலால் புண்ணிய ராசன் என்னும் பேரோடு பொலிங்து விளங்கினன். உலகம் இவனே உவந்து தொழுதது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/320&oldid=1326885" இலிருந்து மீள்விக்கப்பட்டது