பக்கம்:தரும தீபிகை 5.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1860 த ரும தீ பி. கை தன்னை ஈன்ற தாயினும் கருமம் ஒருவனுக்கு ஆன்ற துணை யாம். காப் உடலை உரிமையோடு பேணுவாள்; தருமம் உயிரை என்றும் அருமையாகப் பேணி அருளுகிறது. ஒரு பிறவியில் மருவிய கருமம் வரு பிறவிகளிலும் உரிமையாய்ப் பெரு மகிமை கள் புரிகின்றது; பேரின் பங்களை அருளுகின்றது; ஆதலால் அது சீவனுக்குத் தேவ அமுதமாய்ச் சிறந்து திகழ்கின்றது. அன்றறிவாம் என்னது அறம்செய்க மற்றது பொன்றுங்கால் பொன் ருத் துனே. (குறள், 56) தருமத்தை விரைந்து செய்து கொள்ளுக; அது சிறந்த திரு, நீ இறந்து படுங்கால் அது இறவாக துணையாய் உனக்கு உடன் தொடர்ந்து உறுதி நலன்களைப் புரியும் எனத் தேவர் இங்கனம் கருணையோடு கரும போதனையை உரிமையாச் செய்திருக்கிரு.ர். ஆறிடு மேடும் மடுவும்போலாம் செல்வம் மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர்!--சோறிடும் தண்ணிரும் வாரும் தருமமே சார்பாக உண்ணிர்மை விஅறும் உயர்ந்து. (நல்வழி, 52) உலக மக்களே! உங்கள் வாழ்வு நிலையில்லாதது; பிற உயிர் களுக்கு இரங்கிச் சோறும் நீரும் கொடுங்கள்; அது கருமமாய் உங்கள் உயிர்க்கு இருமையும் இன்பம் கரும்; அகன உரிமையாப் பேணிக்கொள்ளுங்கள் எனஒளவையார் இவ்வாறுகூறியுள்ளார். ஈட்டிய ஒண்பொருளும் இல் ஒழியும்; சுற்றத்தார் காட்டுவாய் நேரே கலுழ்ந்தொழிவர்;---மூட்டும் எரியின் உடம்பு ஒழியும் ஈர்ங்குன்ற நாட! தெரியின் அறமே துணை. (அறநெறிச்சாரம், 147) நீ ஈட்டிய செல்வம் விட்டோடு ஒழியும்; உன் சுற்றத்தார் சுடு காட்டளவில் விட்டுவிலகுவர்; உடம்பு தியில் எரிந்து கொலையும்; நீ செப்த கருமமே உனக்கு இனிய துணையாய் வரும் என முனைப்பாடியார் இப்படி மனிதனுக்கு கினேப்பூட்டியிருக்கிரு.ர். அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே விழி அம்பு ஒழுக மெத்திய மாதரும் விதிமட்டே விம்மி விம்மி இரு கைத்தல மேல்வைத்து அழுமைந்தரும் சுடுகாடுமட்டே, பற்றித் தொடரும் இருவினேப் புண்ணிய பாவமுமே. (பட்டினத்தார்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/321&oldid=1326886" இலிருந்து மீள்விக்கப்பட்டது