பக்கம்:தரும தீபிகை 5.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1872 த ரு ம தீ பி. கை இருமை இன்பங்களும் தெய்வீக நிலையும் புண்ணியத்தால் வரு கின்றன; சிறுமைத் துயர்களும் தினப் பிறப்பும் பாவத்தால் நேர்கின்றன. நிலைமை தெளிந்து தலைமை பெறுக. புண்ணியவான் எங்கும் புகழ்மிகுந்து பொன்மலைபோல் கண்ணியமா ஓங்கிக் கதித்துள்ளான்---பண்ணியபுன் பாவப் பதர்கள் படுதுயர மாயிழிந்து கூவப் படுவார் குலேந்து. உண்டவனே நஞ்சுகொல்லும் உள்ளத்தே தீய எண்ணம் கொண்டவனும் அன்றே கொலேயாகி--மண்டியுயிர் புக்கவழி யெல்லாம் புலத்தீமை யேபெருகித் துக்கமே காண்பன் தொடர்ந்து. புண்ணிய பாவங்களின் நிலைகளைக் குறித்து வந்துள்ள இவை ஈண்டு எண்ணி உணர வுரியன புண்ணியம் அமுதம்; பாவம் நஞ்சு; நஞ்சை யாண்டும் திண்டலாகாது; அமுதத்தையே பேணி அமர கை வேண்டும். அதுவே உறுதியான உப்தியாம். புண்ணியம் ஒருவனே அரசன் ஆக்கும்; தேவன் ஆக்கும்; அரிய பல மேன்மைகளையும் இன்ப போகங்களையும் அருளும்; அதனை மறந்து விடின் எவ்வழியும் இழி துயரங்களே விளையும்; ஆதலால் பாதும் மறவாமல் அதனை உரிமையோடு உறவாய், மருவிக் கொள்ளுங்கள். அது அரிய பெரிய பிறவிப் பேரும். இவ் அதிகாரத்தின் தொகைப்பொருள். புண்ணியம் கண்ணியமான கதி. அருள் நீர்மையால் அது அமைந்து வருகிறது. மனத் துாய்மையால் மருவி விளேகிறது. அது இன்ப போகங்களே இனிது அருளுகிறது. கற்பக தருவினும் அது அற்புதத் திரு. பொருள் இன்பங்கள் அதன்வழி எழுகின்றன. புனித எண்ணம் புண்ணியம் ஆகிற து. . கடவுளும் அதன் பெயரால் விளங்குகிரு.ர். இருமையிலும் அது பெருமை தருகிறது. மன்னன் எனத் தேவன் என மகிமை புரிகிறது. எடு-வது புண்ணியம் முற்றிற்று.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/333&oldid=1326898" இலிருந்து மீள்விக்கப்பட்டது