பக்கம்:தரும தீபிகை 5.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1874 த ரும தீ பி. கை அகில உலகங்களையும் இறைவன் காத்து வருகிருன்; அவ னது அமிசமாப் அரசன் ஒரு தேசத்தைக் காக்க நேர்ந்துள் ளான். காப்பு முறைகள் கருதி யுணரத் தக்கன. அரசன் அன்று கேட்கும் ; தெய்வம் கின்று கேட்கும். என்பது பழமொழி. உலக மக்களுக்குக் தலைமையாய் கின்று ஆதரவு புரிந்து முறை செய்து வருவார் இருவரது நிலைமை சீர்மைகளை இது இவ்வாறு குறித்து வங்களத. ஒருவன் குற்றம் செய்தால் அரசன் தண்டனே அவனுக்கு நேரே விரைந்து கிடைக்கும்; தெய்வ கண்டனை கொஞ்சம் பொறுத்துத்தான் வரும். முன்னது உடலை வருக்கி உள்ளக்தைத் திருத்துகிறது; பின்னது வினைப் போகமாய் உயிரை வருக்தி உப்தி புரிகின்றது. கண் எதிரே காணும் தெய்வமாய் அரசன் காட்சி புரிக் திருக்கலால் மக்களுடைய நன்மை தீமைகளைக் கடிது நாடி முடிவு செய்தருளுகிருன். நாட்டம்காட்டின்நலக்கைநீட்டுகிறது. ஒரு காட்டிலுள்ள மனித சமுதாயம் அமைதியாகவும் ஒழுங்காகவும் வாழ வேண்டுமானுல் அங்கே ஒரு தகுதியான கலைவன் ஆளவேண்டும். தலைமையில் நிலைமைகள் நிலவுகின்றன. தாய் கங்தை மனைவி மக்கள் முதலாக ஒரு குடும்பத்தில் பலர் குழுமி யிருந்தாலும் அதனைச் சீர்மையோடு நடத்த வுரிய நீர்மையாளன் அகற்கு இயல்பாய் நேர்ந்து நிற்கிருன். இயற்கை நியமம் குடி யையும் படியையும் இனிது இயக்கி வருகிறது. ஒரு குடி அதன் தலைவனுல் இயங்கி வருதல் தலைவல்ை உயர்ந்த கடந்து ஒளிமிகுந்து திகழ்கிறது. பால் படியும் அகன் உணவும் உடையும் உயிர்களுக்கு எப்படி அவசியமோ அப்படியே சமுதாயத்துக்குத் தலைவன் தேவையாயுள்ளது. அரசனுக்குக் தலைவன் என்று ஒரு பெயர் தனி உரிமையாப் அமைக்கிருக்கிறது. உடலுக்குக் கலைபோல் உலகிற்கு அரசன் ஒளிபுரிந்து கிற்கிருன். உரிய உரிம்ை அரிய மகிமையாயுளது. கெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலே உலகம். (புறம், 186) கெல் இருக்காலும் நீர் இருந்தாலும் அரசன் இல்லையானல் மாங் தர் இனிது வாழ இயலாது என மோசி கீரனர் என்னும் சங்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/335&oldid=1326900" இலிருந்து மீள்விக்கப்பட்டது