பக்கம்:தரும தீபிகை 5.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1876 த ரும தீ பி. கை பல்லாயிரம் மக்கள் கிறைந்த பெரிய தேசத்தை அரசன் கேசு பெறக் காத்து வருதலால் ஈசனது அமிசம் என அவன் எண்ன நேர்ந்தான். நேரவே இறை என்னும் பெயரை முறையே பெற்ருன். பேரும் சீரும் பெரு மகிமை யுடை IL/ os, இறைகாக்கும் வையகம் எல்லாம்; அவனே முறைகாக்கும் முட்டாச் செயின். (குறள், 547) உலகத்தை அரசன் காப்பான்; அவனை முறை காக்கும் எனத் தேவர் இவ்வாறு நிறை தாக்கிக் காட்டியிருக்கிரு.ர். முறை = தரும நீதி. நீதி நெறியே அரசனுக்கு அதிசய ஆற்றலை அருளி வரும் ஆகலால் அதனை அவன் பேணி வரும் அளவு பெருமை பெருகி வரும் என்பது தெரிய வந்தது. இறை என ஈசன் பெய ரால் அரசனைக் குறித்தது அவனது திவ்விய நிலைமை கருதி. "கராணும் ச கராதிபம்." (கீதை, 10-27)

மனிதருள் நான் அரசன்” எனக் கண்ணன் இவ்வண்ணம் கூறியுள்ளான். காவல் தெய்வம் காவலன் என கின்றது.

'திருவுடைமன்னரைக்கானின்திருமாலேக்கண்டேனே என்னும்' (திருவாய்மொழி) குலமகட்குத் தெய்வம் கொழுகனே, மன்ற புதல்வர்க்குத் தந்தையும் தாயும்---அறவோர்க்கு அடிகளே தெய்வம் அகனவோர்க்கும் தெய்வம் இலேமுகப் பைம்பூண் இறை. நீதிநெறி விளக்கம்,27 ) மன்னர் திருமாலின் அமிசமாய் மருவி வந்துள்ளனர்; மாந்தர் அனைவருக்கும் அவர் தெய்வமே யாவர் என இவை குறித்திருக் கின்றன. குறிப்புகள் அவருடைய சிறப்புகளையும் பொறுப்பு களையும் விளக்கி உலக ஆட்சியின் காட்சியைத் துலக்கியுள்ளன. Rings are like stars-they rise and set—they have The worship of the world, but no repose. [Shelley] 'அரசர் விண் ஒளிகள்போல் மண்ணில் விளங்கி மறைகின்றனர்; உலகம் கொழுது வணங்கும் மகிமை புடையவர்; ஆயினும் அவர்க்கு அமைதியான ஆறுதல் இல்லை’ என ஷெல்லி என்னும் ஆங்கிலக்கவிஞர் அரசரைக் குறித்து இங்கனம் பாடியிருக்கிரு.ர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/337&oldid=1326902" இலிருந்து மீள்விக்கப்பட்டது