பக்கம்:தரும தீபிகை 5.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1884 த ரும தீ பி. கை வளர்ந்து வந்திருக்கின்றன. அந்த வரவில் காட்டுக் கூட்டங்க ளுக்கு அங்கங்கே தலைவன் அமைய நேர்ந்தான். தலைமை: தானம் வழி முறையாய் வரவே அது விழுமிய நிலையில் விளங்க கின்றது. சிறப்புரிமையின் செழுமை நோக்கி அரசனிடம் மக் கள் பயமும் பத்தியும் படிந்து வந்தனர். அரிய ஒரு தெய்வ மாகவே கருதி வையம் அவனை வணங்கி வர நேர்ந்தது. திலக நீள்முடித் தேவரும் வேந்தரும் உலக மாந்தர்கள் ஒப்பளன்று ஒதுப; குலவுதார் மன்னர்க்கு யான் இது கூறுவன் பலவு மிக்கனர் தேவரிற் பார்த்திவர். (1) அருளுமேல் அரசு ஆக்குமன்; காயுமேல் வெருளச் சுட்டிடும் வேந்தெனு மாதெய்வம் மருளி மற்றவை வாழ்த்தினும் வையினும் அருளி ஆக்கல் அழித்தலங்கு ஆபவோ? (2) உறங்கு மாயினும் மன்னவன் தன் ஒளி கறங்கு தெண்டிரை வையகம் காக்குமால்; இறங்கு கண் இமையார் விழித்தே யிருந்து அறங்கள் வெளவ அதன்புறம் காக்கலார். (3) யாவ ராயினும் நால்வரைப் பின்னிடின் தேவர் என்பது தேறுமிவ் வையகம்; காவல் மன்னவர் காய்வன சிந்தியார் காவினும் உரையார் நவை அஞ்சுவார். (4) (சிவக சிந்தாமணி) இந்தப் பாவினங்கள் இங்கே கருதிக் காணவுரியன. தேவரினும் அரசர் சிறந்தவர் எனக் காரணங்களைக் குறித்துக் காட்டி இவை விளக்கியுள்ளன. குறிப்பு நிலைகள் கூர்ந்து உணரக் கக்கன. கடவுளை கினைந்து கினைந்து நெகிழ்ந்து உருகி நின்ற அன்பர் கள் அரசே என்று அவரை ஆர்வத்தோடு அழைத்திருக்கின் றனர். பரமபதியும் அரசன் என வரிசையோடு பரச கின்ருன். அரசே! பொன்னம்பலத்தாடும் அமுதே! அரசனே! அன்பர்க்கு அடியனேனுடைய அப்பனே! (திருவாசகம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/345&oldid=1326911" இலிருந்து மீள்விக்கப்பட்டது