பக்கம்:தரும தீபிகை 5.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1886 த ரும தீ பி. கை மறை கிறுத்திய வழியினல் வழுதியாய்ச் செங்கோல் முறை கிறுத்திய பாண்டிகாட்டு அணியது மொழிவாம்.(2) (திருவிளேயாடற் புராணம்) இறைவன் பாண்டிய வேந்தனப் வந்து இக்க காட்டை ஆண் டிருந்ததை இவற்ருல் அறிந்து கொள்ளுகிருேம். சீவ ராசிகளை என்றும் எங்கும் தனியுரிமையா யினிது காப்பவன் தேவ தேவனே. அந்த வரிசையில் அரச பதவியும் ஒர் கிலேயமாய் அமைந்திருக்கிறது. பரிபாலன முறை பரம நீர்மையாப் கின்றது. உயிரினங்களை நன்கு காத்து வரும் அளவு அரசன் உயர் நிலையில் ஒளி செய்து வருகிருன். காவலன் என்னும் பெயர் அவனது கடமையை நன்கு காட்டி வருகிறது. தன் நிலைமையை ஒர்ந்து எவ்வழியும் செவ்வையாகக் குடிகளைப் பேணி வரின் திவ்விய மகிமைகளை அவன் காணுகிருன். பேணுது பிழைபடின் ஆகை பழிகளை அடைந்து அவலமாயிழிந்து படுகிருன். அரசு முறையில் சிறிது வழுவினும் பெரிய பிழைகள் நேர்க் துவரும் ஆதலால் தீது பாதும் கோாதபடி யாண்டும் அவன் கண்ணுேடிக் காத்து வர வேண்டும். அவ்வாறு காத்துவரின் உலகம் அவனே வாழ்த்தி வணங்கி வழிபாடுகள் செய்து வரும். இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால் தான்கண் டனேத்திவ் வுலகு. 'குறள், 887) இனிய சொல்லும் ஈகையும் பாதுகாப்பும் உடைய அரசனுக்கு உலகம் முழுவதும் உரிமையாய்ப் பணி செய்து வரும் என்பது இதல்ை அறிய வந்தது. கரும நீர்மைகள் கழுவி வரும் அளவு பெருமைகள் பெருகி இருமையும்இன்பங்கள்சுரந்து வருகின்றன. இனிய சொல்லின ன் ஈகையன் எண்ணினன் வினேயன் துாயன் விழுமியன் வென்றியன் கினேயும் நீதி கெறிகடவான் எனின் அனேய மன்னற்கு அழிவும் உண்டாங்கொலோ? (இராமா, மந்தரை 18) ஒரு மன்னன் இன்ன நிலையில் இருக்க வேண்டும் என இது உணர்த்தியுள்ளது. குறிப்பு மொழிகள் கூர்ந்து சிந்திக்கக் தக்கன. இனிய நீர்மைகள் அரிய மேன்மைகளை அருளுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/347&oldid=1326913" இலிருந்து மீள்விக்கப்பட்டது