பக்கம்:தரும தீபிகை 5.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76. அ. ர சு 1887 754. கண்ணே இமைகாக்கும் காட்சிபோல காவலனம மண்ணை இனிதோம்பி வாழுமேல்-விண்ணே விழைந்திருக்கும் தேவருமிம் மேதினியை நோக்கி விழைந்து மகிழ்வர் வியந்து. (+) இ-ன். கண்ணை இமை காக்கும் காட்சிபோல் இம் மண்ணே மன்னன் இனிது பேணி வருவான் ஆனல் விண்ணே விழைந்து மகிழ்க்தி ருக்கின்ற தேவர் யாவரும் இவ் வுலகை உவந்து கோக்கி விரைந்து வருவர் என்பதாம். உலகிற்கு அரசன் உயிர் என அமைந்துள்ளமையான் இதனைப் பேணி வருவது இயல்பான இனிய உரிமையா யிசைக் தது. உடலை எவ்வழியும் உயிர் பிரியமா ஒம்பி வருகிறது. தேகாபி மானம் என்னும் பழமொழி தேகியின் நிலைமையை விளக்கி யுள்ளது. யாரும் தாண்டாமலே வேண்டிய யாவும் உடலுக்கு உயிர் செய்துகொண்டு வருகிறது. அதுபோல் உலகை அரசர் ஒம்பி வருகிரு.ர். உயிரும் உடலும் என உலகும் அரசும் மருவி உரிமை புரிந்து வருதலால் பலவும் நலமாய் கடந்து வருகின்றன. தன் உயிரைப் போலவே குடிசனங்களையும் அரசன் கருதிப் பேணி வருதலால் அவனைத் தெய்வமாகவே உரிமையோடு வழி பாடு செய்து அவர் கிழமை தோய்த்து வருகிருர். இதமாய் இனிமை செப்து வருபவனை வையம் தனிமையாக உயர்த்தித் துதித்த மதித்துவருகிறது. மதிப்பு மன்னியசெயலால்மருவியது. "தன்னுயிர் ஆமென உலகில் தங்கிய மன்னுயிர் அனேத்தையும் புரக்கும் மாட்சியான்' (நைடதம்) நள மன்னனுடைய ஆட்சிநிலையை இது காட்சிப்படுத்தியுள்ளது. புரவலன் என அரசனுக்கு ஒரு பெயர் அமைந்திருக்கிறது. உயிர்களை அவன் புரந்து வரும் நீர்மையால் அது விளைந்து வக் தது. புரத்தல் = பாதுகாத்தல், எவ்வழியும் சிரத்தையோடு பரிந்து பாதுகாத்தருளுதல் புரத்தல் என சேர்ந்தது. தன் ஆட் சியை அவ்வாறு அவன் காத்து வந்தமையால் புரக்கும் மாட்சி, யான் எனக் காப்பு நிலையின் சீர்த்தியோடு போற்ற கின்றன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/348&oldid=1326914" இலிருந்து மீள்விக்கப்பட்டது