பக்கம்:தரும தீபிகை 5.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1888 த ரும தீ பி. கை கண்ணுக்கு இமை என்ன உரிமையோடு இசைக்துள் ளதோ அன்னவாறே மண்ணுக்கு மன்னன் மன்னியுள்ளான். கண்ணில் ஏதேனும் இடருற நேர்க்கால் இமை விரைந்து காக் கும்; அதுபோல் காட்டுக்கு ஏதேனும் அல்லல் நேர்ந்தால் அர சன் ஒல்லையில் அதனை நீக்கித் தன் எல்லையை இனிது காத்கரு ளுவான். இக் காப்புமுறை இயல்பான நிலையில் விரைவாப் நிக ழும் என்பதை உவமைக் குறிப்பால் ஒர்ந்து உணர்ந்து கொள் ளலாம். கண்ணின் நீர்மை நுண்ணிய சீர்மையுடையது. கண்ணேக் காப்பது கவிந்துள இமையன்றி அயலே கண்ணி யுள்ளன நயந்துடன் காக்குமோ? பிறந்த மண்ணைக் காப்பது வந்ததில் பிறந்தமன் குலத்தோர்க்கு ஒண்ணுமே அன்றி ஒழிந்துளோர் செய்வரோ? உரிமை. (விர பாண்டியம்) கண் ஊன்றி எண்ணி யுணர ஈண்டு இது கண்ணி வந்துள்ளது. ஆங்கிலேயர் ஈங்கு வந்து வணிக முறையில் ஆங்காங்குக் தேசங்களை வளைந்து முடிவில் அரசாள மூண்டு கன்பால் நீண்டு புகுந்து திறை கேட்ட பொழுது இத் தென்னட்டு மன்னள் அவரை நோக்கி இன்னவாறு கூறியிருக்கிருன். கண்ணில் துளசி விழ நேர்ந்தால் இமை காக்குமே யன்றிக் கை கால்கள் காவா; என் நாட்டிலுள்ள எனது குடி சனங்களை நான் இனிது பேணு வேன்; ஆருயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள விேர் உரிமை யோடு பேணமாட்டீர்; பொருள் வரவிலேயே கண்ணுய் அரு ளின்றி மருளே புரிவீர்; பழமை தோய்ந்து கிழமை வாய்ந்து உரிமை புரிந்து பெருமை பெருகி வருகிற எனது அரசில் சிறு மைபுக நீர் நுழையாதீர், ஒல்லையில் விலகி எல்லை கடந்து போப் விடும்! என அவ் வல்லவன் வாய்விட்டுச் சொல்லி யுள்ளது ஈண்டு உள்ளி யுணர்ந்து உண்மை தெளிய வுரியது. பாஞ்சாலங் குறிச்சி மன்னன் வீரபாண்டியன் இக் காட்டின் வீர கிலேயை யாண்டும் நிலை நாட்டியுள்ளான்; அவனுடைய சரிதம் அரிய மகிமை வாய்ந்தது; உலகமக்கள் யாவரும்ஒர்க் துஉணரத்தக்கது. அரசன் நன்கு பேணி வருவான் ஆயின் நாடு எங்கும். செழித்துப் பொங்கிய வளங்களோடு பொலிந்து விளங்கும். மாந்தர் உவகை மீதுளர்ந்து யாண்டும் இனிது வாழ்த்து வருவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/349&oldid=1326915" இலிருந்து மீள்விக்கப்பட்டது