பக்கம்:தரும தீபிகை 5.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76. அ சு 1889 மாந்தர் மனமகிழ்ந்து மாகிலத்தில் வாழ்வதெல்லாம் வேந்தர் புரியும் விருந்து. - திருந்திய பண்போடு இருந்து அரசன் புரந்து வரின் அங்கே அரிய பல நன்மைகள் சுரங்து வரும். வரவே யாவரும் இனிய ராப் உயர்ந்து வாழுவர்; தேவரும் அந்த வாழ்வை ஆவலோடு விழைந்து மகிழ்வர்; போகலோகமாய் அதுபொலிந்து விளங்கும். தன்னுடைய நாட்டை எவ்வழியும் செவ்வையாக செறி முறையோடு கண் ஊன்றி மன்னன் பேணி வரின் குடி சனங் கள் மடி முதலிய இளிவுகள் படியாமல் யாண்டும் தெளிவ. டைந்து ஒளிபுரிந்து வருவர்; நாடும் வளங்கள் பல விளைந்து பீடும் பெருமையும் கிறைந்து பாண்டும் உயர்ந்து விளங்கும். தேசம் தேசு மிகுந்து திகழ்வதும், மாசு படித்து மருள்வ தும் அரசனது பாதுகாப்பின் உயர்விலுைம் அயர்விலுைம் முறையே அமைகின்றன. ஆட்சிநிலையேமாட்சியை அருளுகிறது. கண்ணை இமை காப்பது போல மண்ணை அரசன் பாது காக்கவேண்டும் என்றது காப்பின் உரிமையையும் கடமைகளை யும் தலைமை நிலைமைகளையும் கருதியுணர வந்தது. கண்எனப் படுவ மூன்று; காவலன் கல்வி காமர் விண்ணினேச் சுழல ஒடும் வெய்யவன் என்னும் பேர: எண்ணினுள் தலைக்கண் வைத்த கண்ணது இல்லை.ஆயின் மண்ணினுக்கு இருளேக்ேகும் வகைபிறிது இல்லே மன்னே. குடிமிசை வெய்ய கோலும் கூற்றமும் பிணியும் நீர்சூழ் படிமிசை இல்லே ஆயின் வானுள்யார் பயிறும் என்பார் ? முடிமிசைத் திவள வேந்தர் முறைமுறை பணிய விம்மி அடிமிசை நரலும் செம்பொன் அதிர்கழல் அரசர் ஏறே. (சூளாமணி) அரசனது கிலையையும் ஆட்சி முறையையும் குறித்து வந்துள்ள இந்தப் பாசுரங்கள் இரண்டையும் நன்கு கருதியுணரவேண்டும். சூரியன், கல்வி, அரசு ஆகிய இந்த மூன்றும் கண் என உள்ளன. சூரியன் வெளியே உலக இருளை நீக்குகிருன். கல்வி உள்ளே மடமை இருளை நீக்குகிறது. அரசன் உள்ளும் புறமும் எல்லா இருள்களையும் நீக்குகிருன் 237

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/350&oldid=1326916" இலிருந்து மீள்விக்கப்பட்டது