பக்கம்:தரும தீபிகை 5.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76. அ. ர சு 1893 உணர வுரியது. இயற்கை நியமங்கள் இங்கே இனிது விளங்கி யுள்ளன. காப்பாளரின் காட்சியும் மாட்சியும் காண நேர்ந்தன. புண்ணியர், புகழினர் கூடக் காத்தனர். என்றது இராமனது குல மரபில் வந்த அரசரது மகிமை தெரிய வந்தது. கீர்த்திகளை வார்த்தைகளால் வார்த்திருக்கின்ருர். பெரிய புண்ணியங்களால் அரிய அரசர்கள் அமைந்து வரு தலால் புண்ணியர் என அவரது நிலைமை தலைமைகளை எண்ணி யுணர வுரைத்தார். பிறப்பும் சிறப்பும் குறிப்போடு கூடிவந்தன. இங்ஙனம் கலைமையை மருவி நிலவி வருகிற உலகத்துக்கு ஆதிமுதல் உங்கள் குல மரபு உயர்ந்த நீதி மன்னரை உதவி வக் துள்ளது. அந்த வரிசையில் வந்துள்ள நீ இந்த அரசை எம் றருள வேண்டும் என்று பாகனிடம் பரிந்து வேண்டுகின்ருர் ஆதலால் அந்த விரத முனிவர் அரசர் நிலைகளை இவ்வண்ணம் வரைந்து கூறினர். கூரிய உரைகள் சீரிய பொருள்களுடையன. இராமாயண காவியத்தில் இராச கருமங்கள் கிறைந்திருக் கின்றன. அரச நீர்மைகளையும் ஆட்சி முறைகளையும் உரிய பாத் திரங்களின் வாயிலா வெளிப்படுத்தி இடங்கள் தோறும் கம்பர் பெருமான் வரைந்து வைத்திருக்கும் வகைகள் சிறந்த காட்சிச் சாலைகளாய் விளங்கி நிற்கின்றன. காளிதாசர் முதலிய பெரிய கவிகள் ரகுவம்சம் முதலிய நூல்களில் இராச நீதிகளை விரித்துக் கூறியிருக்கின்ருர்; ஆயினும் கம்பரது அரசியல் காட்சி அதிசய நிலையில் ஒளி விசியுள்ளது. கம்பரும் அரசியலும் என அரிய நூல் எழுதும்படி பெரிய உணர்வு கலங்கள் பெருகி யிருக்கின்றன. இருந்து என்ன பயன்? எழுதி என்ன செய்ய? அருமை அறியா மல், அறிவை மதியாமல், தகுதி கண்டு பேணுமல் போலிகளை உவந்து கால வேகத்தில் மயங்கிச் சாலவும் மருண்டு வெருண்டு இருண்டு திரிகிற மக்கள் எதிரே தக்கது கலை எடுத்து வருமா? எங்காட்டும் பெறலரிய இனியபெருங் கலைச்செல்வம் இயல்பாய் ஓங்கி இக்காட்டில் என்றுமே எழிலோடு பெருகியுளது இருந்தும் அந்தோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/354&oldid=1326920" இலிருந்து மீள்விக்கப்பட்டது