பக்கம்:தரும தீபிகை 5.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76. அ. ர சு 1903 758 நல்லாரைக் காத்துகலம் நாட்டலும் நன்றிகெட்ட பொல்லாரைக் கொன்ருெழித்துப் போக்கலும்-எல்லார்க்கும் தெய்வமென கின்றருளும் தேர்வேந்தன் செய்கையாம் செய்வ தவறினுறும் தீது. )بعد( இ-ன். நல்லவர்களை உரிமையுடன் ஆதரித்து உவந்தபேணுதலும், பொல் லாதவர்களை ஒல்லையில் கடிந்து நீக்கித் கன் எல்லேயிலும் இல்லாத படி செய்தலும், தெய்வ நீர்மையுடைய அரசனது கடமையாம்; அதனை அவன் செய்யத் தவறினல் வெய்ய ைேமகள் யாண்டும் நீண்டு விரிந்து நெடுந்துயரங்கள் விளைந்து விடும் என்பதாம். பயிர்களை உழவன் பாதுகாத்து வருதல்போல் உயிர்களை அரசன் உரிமையோடு பேணி வருகிருன். கள்வர் பகைவர் முத விய பொல்லாதவர்கள் புகுந்து அல்லல் புரியாதபடி எவ்வழியும் செவ்வையாக் குடிசனங்களைப் பாதுகாத்து வருபவனே முடி மன்னன் ஆகின்ருன். காவல் அளவே கண்ணியம் மேவுகிறது. யாதொரு கவலையும் காணுமல் தன் நாட்டு மக்கள் யாண் டும் சுகமாய் வாழ்ந்து வரும்படி வழி செய்து விழுமிய நிலையில் விழியூன்றிப் புரந்து வருவதே சிறந்த ஆட்சியாப் விளங்கி வரு கிறது. காவலன் என அரசனுக்கு அமைந்துள்ள பேர் அவனு டைய காப்பு நிலையையும் கடமையையும் நன்கு காட்டியுள்ளது. மாநிலங் காவலன் ஆவான் மன்னுயிர்காக் குங்காலைத் தானதனுக்கு இடையூறு தன்ல்ைதன் பரிசனத்தால் ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால் ஆணபயம் ஐந்தும் தீர்த்து அறம்காப்பான் அல்லனே? (பெரியபுராணம்) உயிர் இனங்கள் துயர் உருமல் காத்து அருளும் கடமை அரச னுக்குப் பிறப்புரிமையாய் அமைந்துள்ளது என இது உணர்த்தி புள்ளது. கிலம் காவலன் என மன்னனுக்கு ஒரு நீர்மையான பேர் சூட்டிச் சீர் தாக்கிக் காட்டியது பரிபாலன முறையில் அவனது குறியான தலைமையை ஒர்ந்து கொள்ள வந்தது. தேசத்தின் தலைமைப் பொறுப்பை ஈசன் அரசனுக்கு அளித்திருக்கலால் அவன் யாண்டும் கண் ஊன்றி நோக்கிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/364&oldid=1326930" இலிருந்து மீள்விக்கப்பட்டது